NIRF Ranking 2025: தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்; NIRF தரவரிசையில் யார் யாருக்கு என்ன இடம்?
NIRF Ranking 2025 Medical Colleges: மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அகில இந்திய அளவில் விஎம்சி எனப்படும் வேலூர் மருத்துவக் கல்லூரி 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

மத்தியக் கல்வி அமைச்சகத்தால் சிறந்த கல்லூரிகளாகத் தேர்வு செய்யப்பட்டு NIRF தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை குறித்து விரிவாகக் காணலாம்.
மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அகில இந்திய அளவில் விஎம்சி எனப்படும் வேலூர் மருத்துவக் கல்லூரி 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில், இடம் பிடித்துள்ள தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்:
- கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் - 3
- அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர் - 9
- சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை - 11
- மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி & அரசு பொது மருத்துவமனை, சென்னை - 16
- S.R.M. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை - 18
- ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை - 21
- PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை - 43
- செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி, கேளம்பாக்கம், செங்கல்பட்டு – 49
முழு பட்டியலைக் காண https://www.nirfindia.org/Rankings/2025/MedicalRanking.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதேபோல தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு பல்கலைக்கழகங்களும், மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதோ அந்தப் பட்டியல்:
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 2
- பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 10
- அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி - 14
- பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 16
- சென்னைப் பல்கலைக்கழகம் - 18
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - 31
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி - 33
- அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் - 34
- பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 40
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 42
முழு பட்டியலை காண https://www.nirfindia.org/Rankings/2025/STATEPUBLICUNIVERSITYRanking.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட என்ஐஆர்எஃப் பட்டியலை https://www.nirfindia.org/Rankings/2025/Ranking.html என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.























