மேலும் அறிய

IND vs ENG Womens T20 : மகளிர் டி-20 உலகக் கோப்பை.. இங்கிலாந்துடன் போராடி தோற்ற இந்திய அணி..

Womens T20 WorldCup IND Vs ENG : டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

தென் ஆப்பிரிக்காவில்  8-வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. 

அரை இறுதி வாய்பை உறுதி செய்வதற்கான மூன்றாவது போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான போட்டி இன்று (18,பிப்ரவரி, 2023) நடைபெற்றது. போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதனாத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இங்கிலாந்து சார்பில் முதலில் பேட் செய்ய களமிறங்கிய சோபியா டன்க்லி, டேனியல் வியாட் இருவரும் நிதானமாக ஆட தொடங்கினர். ஆனால், இந்தியாவின் ரேணுகா சிங்கின் சிறப்பான பந்து வீச்சில் பவர் ப்ளே ஓவர்களில் பெரிதாக அவர்களால் ஜொலிக்க முடியவில்லை. இரண்டாவது பந்திலேயே வியாட்  அவுட் ஆனார். சோஃபியாவும் பத்து ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அடுத்ததாக களமிறங்கிய அலைஸ் கேப்சி அவுட் ஆக, நாட்சீவர் ப்ரண்ட் மற்றும் ஹீதர் நைட் கூட்டணி பார்ட்னர்ஷிப்பை தொடர்ந்தது. இருவரும் அவுட ஆக, ஏமி ஜோன்ஸ் களமிறங்கி 40 ரன் அடித்து கொடுத்தார்.  அவரும் ரேணுகா சிங் பந்தில் அவுட் ஆக,  கேத்ரின் ப்ரண்ட் களமிறங்கினார். ஒவரும் ரேணுகா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.  சோபியா, மற்றும் சாரா க்ளென் இருவரும் இருந்தனர்.

இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்கள் எடுத்து 151 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக நாட்  ஸ் சீவர் ப்ரண்ட்,  50 ரன், ஏமி ஜோன்ஸ் 40 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ரேணுகா சிங் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை எடுத்தார். தீப்தி மற்றும் ஷிகா பாண்டே தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வர்மா நிதானமாக விளையாடியது. 29 ரன்னு ஷஃபாலி வர்மா கேத்ரீன் சீவியர் பந்தில் அவுட் ஆனார். 

8 ஓவருக்கு 57 ரன் இருந்த நிலையில், ஜெமியா 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தவறான ஷாட் தேர்வால் 4 ரன்னில் அவுட் ஆனார். பத்து ஓவரில் 62 ரன் எடுத்திருந்த இந்திய அணியை  ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ் கூட்டணி வெற்றிக்கு தேவையான ரன் சேர்ப்பதை நோக்கி நகர்த்தினர். ஸ்மிரிதி மந்தனா 7 பவுண்ட்ரிகள், ஒரு சிஸ்சர் என்று 41 பந்துகளுக்கு 52 ரன் எடுத்து அரை சதம் அடித்தார். ஸ்மிர்திக்கு டி-20 போட்டிகளில் 21-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், அடுத்த பந்திலேயே நாட் ப்ரண்ட் பந்தில் கேட்ச் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 

இந்தியா 18.2 ஓவரில் 119 ரன்களுக்கு 5 விக்கெட்கள் எடுத்திருந்தது. தீப்தி சர்மா அடிக்க தொடங்கிய போது, ரன் அவுட் ஆனார். ரிச்சா கோஷ் 33 ரன்களுக்கு  47  ரன் எடுத்து அணியின் வெற்றிக்காக நிதானமாக விளையாடினார்.

5 பந்துகளுக்கு 22 ரன் தேவை என்றிருந்த நிலையில் ரிச்சா கோஷ் இரண்டு பவுண்டி அடித்தார். ஃபீரி ஹிட் வாய்ப்பில் சிங்கிள் எடுத்தனர். 

3 பந்தில் 20 ரன் தேவை என்றிருந்த நிலையில் ரிச்சா கோஷ் அடித்த ஷாட் பவுண்டிற்கு சென்றது. இந்திய அணி புள்ளிப்பட்டியில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

 டி-20 உலகக் கோப்பையை தொடர்களை பொறுத்தமட்டில், இரு அணிகளும் 5 முறை மோதியதில் அனைத்திலும் இங்கிலாந்து அணி  வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால், இன்றைய போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி 6-வது வெற்றியை பெற்றது. இங்கிலாந்து அணியில் ஃபீல்ட் செட்டப் மற்றும் பவுலிங் சிறப்பாக இருந்தது. இந்திய அணி ரன் எடுக்க முயற்சித்தாலும், பேட்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்பட்டது இங்கிலாந்து அணி. இந்தியா தோல்வியடைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Embed widget