Watch Video: ‛நாட்டாம... தீர்ப்ப மாத்திச் சொல்லு...’ - அம்பயரின் முடிவுக்கு கோலி கமெண்ட்!
நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.
மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் நேற்று விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, மூன்றாவது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்து ஆடியது. கடந்த போட்டியில் 150 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் தொடர்ந்து இன்றும் சிறப்பாக ஆடினர். இந்திய அணி 276 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்க உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, கேப்டன் கோலி மீண்டும் ஒரு முறை அம்பயரின் முடிவை ஏற்க முடியாமல் ரியாக்ட் செய்தார். இம்முறை கேவமாக அல்ல, ஜாலியாக! நியூசிலாந்து பேட்டிங் தொடங்கிய 16வது ஓவரை அக்சர் படேல் வீச வந்தார். அப்போது, ராஸ் டேலர் ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்தபோது, பந்து அவரது பேட்டில் படாமல் பவுண்டரியைச் சென்றடைந்தது.
"Ye kya karte hain yaar ye log yaar"
— S´ˎ˗ | Kohli, The Captain. (@Kohlian_luvlush) December 5, 2021
"Main udhar aajata hu tum idhar aajao"
VIRAT KOHLI ISSA MOOD🤣😭#INDvsNZ pic.twitter.com/048dtpbyPg
இதை கவனிக்க மறந்த அம்பயர், ’பை’ ரன் தராமல், பவுண்டரிக்கான சிக்னல் மட்டும் தந்தார். இதை கவனித்த கோலி, “இவங்க என்ன பண்றாங்க. நான் அங்க வரேன், நீங்க இங்க வாங்க” என அம்பயர்களை பார்த்து கேப்டன் சொன்ன கமெண்ட் ஸ்டம்ப்ஸ் மைக்கில் ரெக்கார்ட்டாகி இருந்தது. இதை கவனித்த நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
முன்னதாக, முதல் இன்னிங்ஸின்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய விராட் கோலி 4 பந்துகளில் ரன் ஏதுமின்றி அஜாஸ் படேல் பந்தில் அவுட்டானார். ஆனால், இந்த அவுட் சர்ச்சையை கிளப்பியது. அஜாஸ் படேல் வீசிய பந்தில் கோலிக்கு கள நடுவர் அனில் சவுத்ரி அவுட் வழங்கினார். உடனடியாக விராட்கோலி மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்டார். இதை மூன்றாவது நடுவரும் மீண்டும், மீண்டும் ரிவி ரிப்ளேயில் பார்த்தபோது அஜாஸ் படேல் வீசிய பந்து ஒரே நேரத்தில் பேட்டிலும், கோலியின் பேடிலும் (கால்காப்பிலும்) பட்டது. எல்.பி.டபுள்யூ விதிப்படி பேட்டில் பந்துபட்டுவிட்டாலே அவுட் தரக்கூடாது. ஆனால், கோலிக்கு மூன்றாவது நடுவர் அவுட் அளித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
அம்பயரின் தவறான அவுட்டால் கோலி மிகுந்த அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார். மேலம், பெவிலியன் திரும்பும்போது பவுண்டரிக்கான எல்லைக்கோட்டை பேட்டால் அடித்துவிட்டு சென்றார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்