Gambhir on Kohli: விராட் கோலியின் வேகம்... இனி எதிரணிக்கு சோகம்... எச்சரிக்கும் கவுதம் கம்பீர்!
இந்திய அணியின் கேப்டன் பொறுப்புகளில் இருந்து விலகிய விராட் கோலி வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாறுவார் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட்கோலி. இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த கோலி, உலககோப்பை டி20 தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்திய ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலியை பி.சி.சி.ஐ. நீக்கியது.
இவருக்கு பதிலாக புதிய இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. மேலும், #shamebcci என்ற ஹாஸ்டேக்கும் விராட் கோலி ரசிகர்களால் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இந்தநிலையில், விராட் கோலி குறித்து முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"கேப்டன் பதவியின் அழுத்தம் இனி இல்லாமல் விராட் கோலி வரும் போட்டிகளில் பயமில்லாத ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்துவார். விராட் கோலி எவ்வளவு ஆபத்தான பேட்ஸ்மேன் என்பது இனி தெரியவரும். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளது விராட் கோலி மீதான இத்தனை வருட அழுத்தத்தை நிச்சயம் குறைக்கும் என நம்புகிறேன்.
எந்த வடிவிலான தொடர்களாக இருந்தாலும் விராட் கோலி தனது பங்களிப்பை சரியாக செய்து இந்திய அணிக்கு பெருமை சேர்ப்பார். அதேபோல், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பாதுகாப்பாக இருக்கும். இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித். இந்திய அணியின் மற்ற கேப்டன்களை விட ரோகித், இந்திய அணிக்காக எதையோ ஒன்றை மிகச் சரியாக செய்ய இருக்கிறார்" என்றும் தெரிவித்துள்ளார்.
🗣️🗣️ "The pressure will always be there. As a cricketer, it is important to focus on my job."
— BCCI (@BCCI) December 12, 2021
SPECIAL - @ImRo45's first interview after being named #TeamIndia’s white-ball captain coming up on https://t.co/Z3MPyesSeZ. 📽️
Stay tuned for this feature ⌛ pic.twitter.com/CPB0ITOBrv
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்