ஆஸ்திரேலியாவில் படிக்கனுமா? தமிழக மாணவர்களுக்கு அட்வைஸ்களை அள்ளி வழங்கிய ஆஸி. கல்வியாளர்கள்
ஆஸ்திரேலியாவில் படிக்க விருப்பமுள்ள மாணவர்களுக்காக சென்னையில் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் சிறப்பு கலந்துரையாடலை நடத்தியது.

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளிலும் படித்து வருகின்றனர். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் அதிகளவு இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களும் இந்திய மாணவர்களை வரவேற்கின்றன.
ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள்:
இந்த நிலையில், ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் சென்னையில் ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஆஸதிரேலியாவின் பிரபல கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்றனர். அவர்கள் அந்த கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் அங்குள்ள கல்வி வாய்ப்பு, கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.
கல்வியாளர்கள் சிறப்புரை:
ஆஸ்திரேலிய கல்வி நிறுவனத்தின் புகழ்பெற்ற கல்வியாளர்களும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். அவர்கள் கட்டுமானத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு, ஆஸ்திரேலியாவில் என்ன, எங்கே & எப்படி சரியான பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பது? குறித்து விளக்கமாக மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
மேலும், ஆஸ்திரேலிய உணவுகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் பிரதானமாக பயன்படுத்தப்படும் உணவுகளான தேன், ஊட்டச்சத்து பார்கள், சாஸ்கள், சீஸ், பாஸ்தா, கடல் உணவு மற்றும் ஆட்டுக்கறி உள்ளிட்ட உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவின் கல்வி, உணவு:
விழாவில் பேசிய ஆஸ்ட்ரேட்டின் தெற்காசியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையர் விக் சிங், "கல்வி மற்றும் உணவு வகைகளில் ஆஸ்திரேலியாவின் சிறப்பை வெளிப்படுத்தும் இந்த விழாவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நிகழ்வின் மூலம், இந்திய மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் உணவு ஆர்வலர்கள் உயர்மட்ட கல்வி மற்றும் சிறந்த உணவு அனுபவங்களுக்கான முன்னணி இடமாக ஆஸ்திரேலியாவை ஆராய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். இந்திய உணவு வகைகளில் ஆஸ்திரேலிய விளைபொருட்களின் வளர்ந்து வரும் இருப்பு உயர்தர பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு ஒரு சான்றாகும்" என்றார்.
வர்த்தக வளர்ச்சி:
ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் குறித்து ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் (ஆஸ்ட்ரேட்) என்பது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு ஈர்ப்பு நிறுவனமாகும்.
ஆஸ்திரேலியாவின் செழிப்பை வளர்க்க வணிகங்களுக்கு தரமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு சேவைகளுக்காக இது செயல்படுகிறது. சந்தை தகவல் மற்றும் நுண்ணறிவுகளை உருவாக்கி வழங்குவதன் மூலமும், ஆஸ்திரேலிய திறனை மேம்படுத்துவதன் மூலமும், விரிவான உலகளாவிய நெட்வொர்க் மூலம் இணைப்புகளை எளிதாக்குவதன் மூலமும் இதைச் செய்கிறோம்.
மேலும் தகவல்களுக்கு, www.international.austrade.gov.au தளத்தில் தகவல் அறியலாம். சென்னையைத் தொடர்ந்து, இந்த விழா புனே (மார்ச் 16), அகமதாபாத் (மார்ச் 20) மற்றும் டெல்லியிலும் (மார்ச் 22) நடைபெறவுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

