சாலை வசதி இல்லாததால் பரிதாபமாக பறிபோன பெண்ணின் உயிர் - கொடைக்கானலில் நடந்த சோகம்
கொடைக்கானலை சுற்றியுள்ள வெள்ளகெவி சின்னுார், பெரியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதியின்றி இப்பகுதி மக்கள் அவதிப்படும் நிலை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
கொடைக்கானலில் சாலை வசதி இல்லாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு டோலி கட்டி தூக்கி வந்த பெண் உயிரிழந்தார். வெள்ள கெவி மலை கிராமத்திற்கு சாலை வசதியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி வெள்ள கெவி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர், பெரியூர் காலனி உள்ளிட்ட ஐந்து மலை கிராமங்கள் உள்ளது. என்னதான் கிராம புறங்களை சூழ்ந்து கொடைக்கானல் இருந்தாலும் கொடைக்கானல் நகர்பகுதி மட்டும் நவீன பரிணாம ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இருந்த போதும் கொடைக்கானலை சுற்றியுள்ள வெள்ளகெவி சின்னுார், பெரியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதியின்றி இப்பகுதி மக்கள் அவதிப்படும் நிலை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
வெள்ள கெவி கிராமத்தில் வசித்து வந்த மணிமேகலை (வயது 33) என்ற பெண்ணிற்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்ததாகவும் இவருக்கு குறை ரத்த அழுத்தம் காரணமாக மிகவும் உடல்நிலை மோசமான நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மார்ச்14ம் தேதி மாலை டோலி கட்டி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை வழியாக 12 கிலோமீட்டர் தூக்கி வந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சிவன் கோயிலில் நந்தி ஏன் வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்தப் பெண் 30 நிமிடத்திற்கு முன்பே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பெண்ணின் உடலை மீண்டும் அவர்களது மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் பெரியகுளத்தில் உள்ள நகராட்சி பொது மயானத்தில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டு அவசர கால நேரங்களில் இக்கிராமத்திலிருந்து சிகிச்சைக்கு வரக்கூடிய நிலை இல்லாததால் இது போன்ற உயிரிழப்புகள் அடிக்கடி நடந்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெள்ள கெவி ஊராட்சியில் உள்ள மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாததால் இதுபோன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு டோல்கேட் தூக்கி வரும் நிலை இருப்பதாகவும், உயிரிழப்புகளை அடிக்கடி சந்தித்து வருவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில் ‘கொடைக்கானலில் இருந்து டால்பின் நோஸ் வரை ரூ.23 கோடியில் ரோடு அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பப்பட்டுள்ளது. எஞ்சிய டால்பின் நோஸ் முதல் வெள்ளகெவி வரை 5 கி.மீ., துாரம் ரோடு அமைக்கும் பணிக்கான ஆய்வு நடந்து வருகிறது” என்றார். கொடைக்கானல் பெரியகுளத்திற்கு இடையே தலா 8 கி.மீ., துாரம் சாலை இல்லாத நிலையில் கிராம மக்களின் துயரம் தொடர்கிறது. இப்பிரச்னையில் அரசு துரிதம் காட்டி சாலஒ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

