கூடுதலாக சீட் கேட்போம்; ஆனால் கூட்டணிக்காக... - திருமாவளவன் சொன்னது என்ன?
தேர்தலிலையே நிற்கவில்லை வாக்குகளை பெறவில்லை. ஆனால் நடிகர்தான் அடுத்த முதல்வர் என ஊடகங்கள் தூக்கி நிறுத்தி புகழ் பாடி கொண்டிருக்கிறது - திருமாவளவன்

விழுப்புரம்: சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூடுதலான இடங்களிலும் போட்டியிட வேண்டுமென கேட்டுப்பெற முயற்சிப்போம். ஆனால் கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்ககூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், அமைச்சர் பொன்முடி, கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது எம் பி ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,
நடிகர்கள் கட்சி துவங்கும் போதெல்லாம் விசிகதான் பாதிக்கப்படுமென தெரிவிப்பார்கள். ஆனால் யார் யாரெல்லாம் கட்சி தொடங்கினாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சீர்குலைக்க முடியாது என்றும் சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை மடைமாட்டிவிட முடியாது நடிகர் ஒருவர் கட்சி துவங்கி விட்டதால் அவர்கள் பின்னால் இளைஞர்கள் சென்றுவிடுவார்கள் தெரிவித்தார்கள். நடிகர் பின்னால் செல்லும் அப்படி பட்ட இளைஞர்கள் விசிகவிற்கு தேவையில்லை என்றும் திருமாவுடன் பயணிப்பவர்கள் தான் உண்மையானர் விசிகவினர் அவர்களை திசை மாற்ற முடியாது என தெரிவித்தார்.
விசிகவை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டுமென அரசியலுக்கு வரவில்லை சாதிய வன்கொடுமையினால் பாதிப்பிற்குள்ளாவதை தடுக்கவே களத்தில் இறங்கியதாகவும், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றது வெற்றி அல்ல சூது சூழ்ச்சி, அவமானங்களை தாங்கி அரசியலில் கால் நூற்றாண்டு தாண்டி விசிக பயணித்து உள்ளதாக கூறினார். சாதிய அடிப்படையிலான தேர்வு அல்ல விசிக என்றும் மூன்றாவது அணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை, தேர்தலிலையே நிற்கவில்லை வாக்குகளை பெறவில்லை ஆனால் நடிகர் தான் அடுத்த முதல்வர் என ஊடகங்கள் தூக்கி நிறுத்தி புகழ் பாடி கொண்டிருக்கிறது, நடிகராக இருந்திருந்தால் தலித் அல்லாமல் இருந்திருந்தால் நான் தான் முதல்வர் என ஊடகங்கள் தெரிவித்திருப்பார்கள்.
அதிகார பகிர்வு தொடர்பாக இன்றைக்கும் திருமாவளவனுக்கு பேரம் பேச தெரியவில்லை சாதி வெறியர்களும், மத வெறியர்களும் கொட்ட மடிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் அரசியல் செய்வதாகவும், கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம் என்று கூறியது அது ஒரு கனவு இந்த அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டும் இன்றைக்கு தமிழ்நாட்டில் பல கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை. அனைத்து தரப்பு மக்களும் விசிகவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நான்கு தொகுதிகளில் பெற்ற வெற்றி.
அதில் இரண்டு பொதுத்தொகுதி 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூடுதலான இடங்களிலும் போட்டியிட வேண்டும் என கேட்டுப்பெற முயற்சிப்போம். ஆனால் கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்க்கூடாது என தெரிவித்தார். திமுகவுடன் இனைந்து தேர்தலை சந்திக்கிறோம். சாதி வெறியர்கள், மத வெறியர்கள் பலம் பெற்றால் தாழ்த்தப்பட்ட, பட்டியல் சமூக மக்களை காப்பாற்ற முடியாது.
பெரியார் கொள்கயை பின்பற்றும் திமுக ஆட்சியில் இருக்கும்போதே சாதிய சக்திகளை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. திமுக அரசு அதனை ஒடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அதனையும் நாம் உணர்கிறோம். பெரியார் இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கூட்டணி ஆட்சி இருக்கும்போதே சாதி வெறியர்கள் கொட்டமடிக்கிறார்கள்.
இங்கு பிஜேபி, சங்பரிவார் கும்பல் ஆட்சிக்கு வந்துவிட்டால் பட்டியல் சமூக மக்களை நிலை என்னவாகும் சாதியவாதத்தை நியாயப்படுதக்கூடியவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும். அவர்களுடன் பாஜக கை கோர்த்தால் என்னவாகும். கூட்டணி விட்டு வெளியே வாருங்கள் என கூறுகிறார்கள். தேர்தல் அரசியல் வேறு, திருமாவளவன் ஆட்சியில் இருந்தாலும் சாதிய வன்முறையை தடுக்க முடியாது. 24 மணி நேரத்தில் சட்டம் போட்டு தடுக்க முடியாது என கூறினார்.
ஒரு குற்றவாளி பரோலில் வருகிறான் அவனை கொண்டாடும் சமூகமாக உள்ளது. இது கேடான கலாச்சாரம். திமுகவுக்கு சொம்பு அடிக்கிறார்கள் என கூறுகிறார்கள் இது அற்பர்களின் விமர்சனம். கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லை. கொள்கை சார்ந்து வழிநடத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் எண்ணிக்கையில் பற்றி கவலைப்படுவதாக இல்லை. என்னை ஏமாற்றியதாக நினைக்கட்டும், நானும் ஏமாந்ததாக என்னிக்கொள்கிறேன் இந்த விசிக நாட்டை ஆள வேண்டும் என மக்கள் சொல்லும் காலம் வரும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற கூட்டம் நள்ளிரவு 12. 03 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

