Immigration Bill: போலி பாஸ்போர்ட், விசா இருந்தால்.. இத்தனை ஆண்டுகள் சிறையா? அரசு கொண்டு வரும் புதிய சட்டம்
Immigration Bill:நமது நாட்டில் தற்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை ஒழுங்குப்படுத்த பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்ளிட்ட 4 சட்டங்கள் தற்போது அமலில் உள்ளது.

இந்தியாவுக்குள் போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா பயன்ப்படுத்தினால் கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்ற மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட மசோதா:
நமது நாட்டில் தற்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை ஒழுங்குப்படுத்த பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்ளிட்ட 4 சட்டங்கள் தற்போது அமலில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது உள்ள 4 சட்டங்களுக்கு பதிலாக குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த மசோதா கடந்த 11 ஆம் தேதி நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் இன்னும் இது நிறை வேற்றப்படவில்லை.
ஆனால் இந்த மசோதாவில் தற்போது அமலில் உள்ள 4 மசோதாவில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது, மேலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப சில முக்கிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, ஆனால் குடியுரிமை தொடர்பான எந்த அம்சங்களும் இதில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது
சட்டவிரோதமான குடியேற்றம்:
தற்போது இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நாட்களை கடந்து வெளிநாட்டினர் தங்கும் பட்சத்தில் அந்த பிரச்சனைகளை கையாளவும் இந்த மசோதாவானது பயன்படுகிறது.
இந்த மசோதா நாடளுமன்றத்தில் நிறைவேறியவுடன் தற்போது நடைமுறையில் உள்ள பழைய 4 மசோதாக்களும் ரத்து செய்யப்படும். சட்டங்களை எளிமையாக்கவும் மத்திய அரசின் கொள்கைக்கேற்ப இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன தண்டனை:
புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் என்ன தண்டனை வழங்கப்படும் என்பது பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ் போர்ட்டோ அல்லது போலி விசாவையோ அல்லது முறை கேடாக பெறப்பட்ட பயண ஆவணங்களை பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உரிய பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும், 5 லட்சம் வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையானது விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் கட்டாயம் செய்ய வேண்டியது:
வெளிநாட்டினர் தாங்கள் தங்கியிருக்கும் தகவலை ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் தெரிவிப்பு கட்டாயமானதாகும். அதன் மூலமாக வெளிநாட்டினர் தங்கியிருக்கும் இடங்களை கண்காணிக்க முடியும், விமானம் மற்றும் கப்பல் மூலம் வரும் வெளிநாட்டினரின் வரும் தகவலை அந்த கப்பல் அல்லது விமான நிறுவனமோ அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியமானதாகும்.
வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் தருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

