Sai Abhyankkar: சாய் அபங்கருக்கு அடிச்சது ஜாக்பாட் - வசூல் மன்னனின் படத்திற்கு இசையமைக்கிறாரா?
இளம் வசூல் மன்னன் நடிக்கும் புதிய படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்றைய சூப்பர் ஹீரோவாக உருவாகிக் கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்தடுத்த 2 படத்திலும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் எடுத்து கொடுத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வித்தியாசமான கதையை மையப்படுத்திய லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும், ராதிகா, சத்யராஜ், யோகி பாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் தான் டிராகன். இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியானது.
ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற இந்தப் படம் ரூ.160 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.கே) படத்தில் நடித்துள்ளார்.
விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த்ப் படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

