Shubhda Bhosale : அம்பயராய் அவதாரம் எடுத்த அழகே...! இணையத்தை கலக்கும் சுப்தா போசலே..!
சுப்தாவிற்கு விளையாட்டில் எந்த அளவிற்கு ஆர்வம் அதிகமோ, அதே அளவில் படிப்பிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
முன்னாள் உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தற்போது ஓமனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், கிரிக்கெட் உலகின் ஜாம்வான்களான முத்தையா முரளிதரன்,அக்தர்,கிப்ஸ், லாரா என்று பலரும் விளையாடி அசத்தி வருகின்றனர். இதற்கிடையில், போட்டியின் மற்றொரு அம்சமாக இந்த தொடரில் அதிகம் பேசப்பட்டு வருவது பெண்களும் நடுவர் குழு மற்றும் அதிலும் குறிப்பாக இந்தியாவின் இளம் பெண் நடுவர் சுப்தா போசலே கெய்க்வாட் தான்.
அட யாருப்பா இந்த தேவதை இணையத்தை இப்படி கலக்கு கலக்குறாங்க என்று கேட்டிங்கன்னா அதுக்கு எங்களிடம் பதில் இருக்கு.
சுப்தா போசலே மத்திய பிரதேசம், குவாலியர் நகரை சேர்ந்தவர். இவரது குடும்பமே ஒரு கிரிக்கெட் குடும்பம்தான். கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தில் பிறந்தார். சுப்தாவின் தந்தை அஜித் போசலே பயிற்சியாளராகவும், அவரது மாமா ஸ்ரீகாந்த் போசலே ஒரு முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார். மேலும், சுப்தாவின் சகோதரரும் கிரிக்கெட் வீரர்.
குடும்பமே கிரிக்கெட் மீது அளவு கடந்த காதலை கொண்டு உள்ளத்தால், சுப்தாவிற்கு கிரிக்கெட் மீது காதல் தொற்று பரவியுள்ளது. சுப்தா மத்திய பிரதேசத்திற்காக U-16 மற்றும் U-19 நிலைகளில் கிரிக்கெட் விளையாடியுள்ளார், அதற்கு முன் நடுவராக பணியாற்றினார்.
சுப்தாவிற்கு விளையாட்டில் எந்த அளவிற்கு ஆர்வம் அதிகமோ, அதே அளவில் படிப்பிலும் கவனம் செலுத்தியுள்ளார். இவர் தனது நிலை O நடுவர் தேர்வை முடிப்பதற்கு முன்பு, உடற்கல்வி மற்றும் விளையாட்டு உளவியலில் PhD பட்டம் பெற்றார். சுப்தா தனது முதல் போட்டியை 2012 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ஜேஎஸ் ஆனந்த் டிராபியில் நடுவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்தா தற்போது ஜபுவாவின் தாண்ட்லாவில் உள்ள அரசு கல்லூரியில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சுப்தாவிற்கு சுஜய் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள பெண்கள் நடுவர் குழுவில் சுப்தாவுடன் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லாரன் ஏஜென்பேக், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுமைரா ஃபரா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த ரெனி மாண்ட்கோமெரி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
It takes an innate amount of talent & love for cricket to truly become a great umpire.
— Legends League Cricket (@llct20) January 25, 2022
Meet the inspiring women, appointed as the official umpires of Howzat #LegendsLeagueCricket, open up about their feelings & their love for the game.#InspiringWomen #LLCT20 pic.twitter.com/RqiTWWZkY5
இந்தநிலையில், இவரை இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வரும் ரசிகர்கள் வருகின்ற ஐபிஎல் தொடரிலும் இவரை அம்பயராக களமிறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைக்கு பிசிசிஐ தலையசைத்தால் ஐபிஎல் தொடரிலும் இவர் அம்பயரிங் செய்யும் அழகை காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்