IPL 2022 Auction: இலங்கை வீரரால் சிக்கலில் சிஎஸ்கே.. மீண்டும் ஐபிஎல் பஞ்சாயத்து - வலுக்கும் எதிர்ப்பு! தெறிக்கும் ட்விட்டர் போஸ்ட்கள்..!
நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இலங்கை அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவை 70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
கடந்த திங்கட்கிழமை முதல் ட்விட்டரில் பாய்காட் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஹேஷ்டேக் அதிகளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் என்று நாடுமுழுவதும் தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது. பாய்காட் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஹேஷ்டேக் ஏன் டிரெண்டிங்கில் உள்ளது? மற்றும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துபவர்களின் கோரிக்கை என்ன?
இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இலங்கை அணியின் மாயஜால சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவை 70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. இதையடுத்து, சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் என்று உலகமுழுவதும் உள்ள தமிழர்கள் ஹேஷ்டேக்கின் கீழ் கோரிக்கை விடுத்துள்ளனர். இது மட்டுமின்றி ரெய்னாவை அணியில் எடுக்கவில்லை என்றும் அவரது ரசிகர்கள் கோபக்கனலைக் கக்கி வருகின்றனர்.
மகேஷ் தீக்ஷனாவை தமிழர்கள் புறக்கணிக்க காரணம் என்ன..?
மகேஷ் தீக்ஷனா இலங்கையின் மாயஜால சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவரது பந்துவீச்சு பலத்தை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.70 லட்சத்திற்கு வாங்கியது. இந்தநிலையில், மகேஷ் தீக்ஷனா இலங்கை ராணுவம் அணிக்காக விளையாடியவர் என்றும், இது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துரோகம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
We Tamils do not oppose Maheesh Theekshana just bcz he is a Sinhalese.The key reason for our protest is that he was from an army brigade that acted very brutally and massacred Tamils in Sri Lanka @CskIPLTeam #Boycott_ChennaiSuperKings #BanSLplayersInIPL #JusticeForTamilEelam pic.twitter.com/xG8WU8GmJu
— சுமேசு தமிழன் (@msumeshkumar) February 14, 2022
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னதாக, இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சென்னை அணிக்காக விளையாடியபோதும் இதேபோல் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டு படமும் கைவிடப்பட்டது.
Millions of Tamil people all over the world are deeply shocked and hurt by the decision of @ChennaiIPL to buy a Sri Lankan cricketer who has played for Sri Lankan army cricket team as well.
— பிரியக்குமார் அ (@ProudTamizhan1) February 14, 2022
TN CM should take immediate action @mkstalin#Boycott_ChennaiSuperKings pic.twitter.com/ylsJT1CRJH
கடந்த 2013 ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, எந்தவொரு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழ்நாட்டில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்