Shafali Verma: டி20 போட்டிகளில் இளம்வயதிலேயே வரலாறு படைத்த ஷபாலி வர்மா...! குவியும் வாழ்த்துக்கள்..
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா சர்வதேச டி20 போட்டியில் மிக இளவயதிலே 1000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக வலம் வருபவர் ஷபாலி வர்மா. பேட்டிங்கில் அதிரடி காட்டும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இடது கை பேட்டிங் வீராங்கனையான ஷபாலி வர்மா தற்போது டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
5⃣0⃣ for Shafali Verma 👏👏
— BCCI Women (@BCCIWomen) October 8, 2022
A superb batting display by the #TeamIndia batter as we move to 108/1 after 14 overs. 👌
Follow the match ➡️ https://t.co/YrBDw2RKTJ#INDvBAN #AsiaCup2022 pic.twitter.com/8ZI6id4Jkq
அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 1000 ரன்களை விரைவாக கடந்த இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய மகளிர் அணி இன்று வங்காளதேச மகளிர் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Shafali Verma continues to break records as a teenager 🙌https://t.co/SGqwGXGPuC #INDvBAN #AsiaCup2022 pic.twitter.com/WhsqvO3JUX
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 8, 2022
இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா, கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ரோட்ரிக்ஸ் அசத்தலாக ஆடினர். இந்திய அணியின் தொடக்க வீராங்கனை 44 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 55 ரன்களை விளாசினார். இந்த போட்டியில் அரைசதம் அடித்த ஷபாலி வர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் மிக இளவயதிலே 1000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை ஷபாலி வர்மா படைத்தார். 18 வயது 253 நாட்களில் ஷபாலி வர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். ஷபாலி வர்மா 43 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1036 ரன்களை விளாசியுள்ளார். 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 அரைசதங்களுடன் 242 ரன்களை விளாசியுள்ளார். 21 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 531 ரன்களை எடுத்துள்ளார்.
வங்காளதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் ஷபாலி வர்மா அசத்தியுள்ளார். 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் படிக்க : Washington Sundar : தீபக் சாஹர் விலகலால் மீண்டும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர்..!
மேலும் படிக்க : சிலை இருக்கு தோனி எங்கே..? தோனிக்காக வைக்கப்பட்ட மெழுகு சிலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!