மேலும் அறிய

Washington Sundar : தீபக் சாஹர் விலகலால் மீண்டும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர்..!

தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து தீபக்சாஹர் காயத்தால் விலகிய காரணத்தால் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் களமிறங்கவில்லை.  

இதையடுத்து, எஞ்சிய 2 போட்டிகளில் தீபக்சாஹர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிவிப்பில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தீபக்சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர் ( துணைகேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான், சிராஜ், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் ராஞ்சி மைதானத்தில் நாளை மோத உள்ளது. இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டெல்லியில் வரும் 11-ந் தேதி தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

வாஷிங்டன் சுந்தர் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளையும், 4 ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும், 31 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் முக்கியமான தருணத்தில் வாஷிங்டன் சுந்தர் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்துவதில் வல்லவர். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 57 ரன்களையும், 31 டி20 போட்டிகளில் 47 ரன்களையும், டெஸ்ட்டில் 265 ரன்களையும் விளாசியுள்ளார்.

மேலும் படிக்க : Deepak Chahar: ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சாஹர்? இதுதான் காரணமா?

மேலும் படிக்க : சிலை இருக்கு தோனி எங்கே..? தோனிக்காக வைக்கப்பட்ட மெழுகு சிலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
Rishabh Pant:
Rishabh Pant: "நான் அடிச்சா தாங்கமாட்டா.." சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டின் சீறும் சிங்கம் ரிஷப்பண்ட்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
TN Weather News: சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Embed widget