IND vs ZIM T20 WC LIVE: பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய இந்தியா..! தோல்வியுடன் வெளிேயேறிய ஜிம்பாப்வே..!
IND vs ZIM T20 World Cup 2022 LIVE Updates: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இதுவரை டி20 போட்டிகளில் ஏழுமுறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், இந்தியா 5 முறையும், ஜிம்பாப்வே 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
LIVE

Background
71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
ஜிம்பாப்வே அணியை 119 ரன்களில் சுருட்டி இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
போல்டாக்கிய அஸ்வின்
ரயான் பர்லை தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் போல்டு ஆக்கி ஆட்டமிழக்கச் செய்தார்.
10 ஓவர்கள் முடிவில் 59/5
10 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.
ஷமிக்கு இரண்டாவது விக்கெட்
முகமது ஷமி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனஆர் ஜிம்பாப்வே அணியின் முன்யோங்கா. நடுவரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் கேட்டார். இருப்பினும், மூன்றாவது நடுவர் அவர் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
ஒரு கையில் கேட்ச் பிடித்த ஹார்திக் பாண்டியா
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் எர்வினின் கேட்சை ஒரு கையில் லாவகமாக பிடித்து ஆட்டமிழக்க செய்தார் ஹார்திக் பாண்டியா. அவர் வீசிய ஓவரில் தான் இந்த விக்கெட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

