கரூர் அசோக் நகர் சக்தி விநாயகர் ஆலய அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா
கரூர் தான்தோன்றி மலை அசோக் நகர் பகுதியில் அமைந்த அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன், அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
![கரூர் அசோக் நகர் சக்தி விநாயகர் ஆலய அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா Karur Ashtamantana Maha Kumbabhishek ceremony at Ashok Vinayagar Temple, Ashok Nagar TNN கரூர் அசோக் நகர் சக்தி விநாயகர் ஆலய அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/1e53ca064109470fa41d5f0093ac2edb1695104507858113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அசோக் நகர் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை அசோக் நகர் பகுதியில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன், அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ஆலயம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைக்கப்பட்டு, ஆலயத்தின் சிவ தொண்டர்கள் யாகசாலையை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என மூன்று கால யாக வேள்வி நடைபெற்று, அதன் பின்னர் மேல தாளங்கள் முழங்க யாகசாலைக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேல தாளங்கள் முழங்க ஆலய நிர்வாகிகள் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலச குடத்தை ஆலயத்தில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர், அருள்மிகு பாலமுருகன், அருள்மிகு வாராகி அம்மன் உள்ளிட்ட சுவாமி திருவடி யை சேர்ப்பித்தனர்.
அதைத் தொடர்ந்து கோபுர கலசத்திற்கு வந்த தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, மகா பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் தான்தோன்றி மலை அசோக் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவின் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)