Ayudha Pooja Procedure: ஆயுத பூஜை 2022… எப்படி கொண்டாட வேண்டும்? நல்ல நேரம் எது? பூஜைப் பொருட்கள் என்னென்ன?
Ayudha Puja Saraswati Puja Vidhanam in Tamil: துர்க்கை தெய்வம் ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை போல பொதுமக்கள் தங்கள் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களுக்கு பூஜை செய்து கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 4 ம் தேதி நவமி திதியன்று ஆயுத பூஜையும், செப்டம்பர் 5 ம் தேதி தசமி திதியில் விஜயதசமியும் கொண்டாடுகிறோம். இந்துக்கள் கொண்டாடும் இந்த விழா காலங்காலமாக பாரம்பரியமாக பல இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக உள்ளது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி திதியில் ராமன் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாகப் புராணக்கதைகள் சில கூறுகின்றன. இந்த போருக்காக துர்க்கை தெய்வம் ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் தங்கள் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜை செய்யும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
தேதி
ஒன்பதாம் நாள் நவமி திதியில் ஆயுதங்களுக்கு பூஜை செய்து, தசமி திதியில் அம்பாளின் வெற்றியை கொண்டாட வேண்டும். 2022 ம் ஆண்டில் செப்டம்பர் 26 ம் தேதி துவங்கி, அக்டோபர் 4 ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 4 ம் தேதி நவமி திதியன்று ஆயுத பூஜையும், செப்டம்பர் 5 ம் தேதி தசமி திதியில் விஜயதசமியும் கொண்டாடுகிறோம்.
நேரம்
ஆயுத பூஜை அன்று முக்கியமான நேரங்கள் என்னவென்றால், அக்டோபர் 4 ஆம் தேதி, சூரிய உதயம் 6:23 AM தொடங்குகுறது. அந்த நாளில் 6:07 PM மணிக்கு சூரியன் அஸ்தமனம் ஆகிறது. நவமி திதி தொடங்கும் நேரம் அக்டோபர் 03, 2022 மாலை 4:38 மணி ஆகும். நவமி திதி முடியும் நேரம் அக்டோபர் 04, 2022 அன்று பிற்பகல் 2:21 மணிக்கு ஆகும். சந்தி பூஜை முகூர்த்தம் அக்டோபர் 4 ஆம் தேதி, பிற்பகல் 1:57 மணிக்கு தொடங்கி 2:45 மணிக்கு முடிவடைகிறது. இவ்வாறாக இந்தியா முழுவதும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவதை வெளிப்படுத்துகிறது.
ஆயுத பூஜை கொண்டாடுவது எப்படி?
ஆயுத பூஜையன்று நம் தொழிலுக்கான கல்விக்கான ஆயுதங்களை அன்னையின் முன் வைக்க வேண்டும். மஞ்சள் மற்றும் சந்தனம் கலந்து அவற்றின் பொட்டு வைத்து அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களில் திலகமிடுவது அவசியம். துர்க்கை அன்னை முன் எல்லாவற்றையும் படைத்து பின்னர் பஜனைகள் பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி, கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை முதன்மைபடுத்தி வழிபடுகிறோம். ஆனால் ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, லக்ஷ்மி தேவி, ஆகிய மூவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.