மேலும் அறிய

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

October Month Rasi Palan 2022 in Tamil: சில ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோக அமைப்பு கிடைக்கும். சிலருக்கு உச்சம் பெறும் புதனாலும், ஆட்சி பெறும் சுக்கிரனாலும் விபரீத ராஜயோக அமைப்பு தேடி வரும்.

அக்டோபர் மாதம் பல ராசிக்காரர்களுக்கு திடீர் யோகத்தையும் செல்வத்தையும் அள்ளிக்கொடுக்கப் போகிறது, சிலருக்கு ராஜயோகமும் கைகூடி வரப் போகிறது. அக்டோபர் மாதத்தில் நவ கிரகங்களின் கூட்டணி, பார்வையால் யார்யாருக்கு நல்ல வேலை கிடைக்கும்? யாருக்கு வேலையில் சிக்கல்கள் நீங்கும்? யாருக்கு பொருளாதார வளம் அதிகரிக்கும்? என்றெல்லாம் பார்க்கலாம். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் உள்ள செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார், சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். சூரியன் பாதி நாட்கள் கன்னி ராசியிலும் அதன் பின்னர் துலாம் ராசியிலும் பயணம் செய்வார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது உள்ளது. சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இந்த மாதம் இடப்பெயர்ச்சி அடைகின்றன. சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெற்று பயணம் செய்யும் போதிலும் ஆட்சி பெற்று அமரும் சுக்கிரனுடன் பின்னர் பயணிக்கப்போவதால் சில ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோக அமைப்பு கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்று பயணம் செய்யும் புதனாலும், ஆட்சி பெற்று பயணம் செய்யும் சுக்கிரனாலும் விபரீதமான ராஜயோக அமைப்பும் தேடி வரப்போகிறது. 

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

மேஷம்

ராசிநாதனான செவ்வாய் கிரகம் 15 நாட்களுக்கு இரண்டாம் வீட்டிலும் பிற்பகுதியில் 3வது வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பு. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அதுவும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் வரும். பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும். மொத்தத்தில் இந்த மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் மாதமாக திகழும்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

ரிஷபம்

ராசி நாதன் நீசபங்கம் அடைந்திருப்பது சிறப்பானதில்லை. புதிய முயற்சிகளுக்கு தடைகள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால், அப்போது வெற்றிகளும் யோகங்களும் தேடி வரும். பெண்களால் நன்மை உண்டாகும் யோகம் உள்ளது. பெரிய வெற்றிகள் கிடைக்கும். திருமணத்திற்கு வரன் பார்க்க உகந்த மாதம்தான். வருமானம் மேலும் அதிகரிக்கும். அதே போல சுப செலவுகளும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும், பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

மிதுனம்

அஷ்டம சனியின் பிடியில் உள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் முயற்சிகளு வெற்றி கிடைக்கும். ராசிநாதன் புதன் உச்ச நிலையில் பயணம் செய்வதால், நன்மைகள் அதிகம் நடைபெற வாய்ப்புண்டு. மாற்றங்களும் முன்னேற்றங்களும் மளமளவென உண்டாகும். வேலையில் உள்ள மன அழுத்தம் நீங்கும், புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறக்கும். வருமானம் அதிகமாகும், கடன் தொல்லை நீங்கும்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

கடகம்

குரு பகவான் பார்வையால் அக்டோபர் மாதத்தில் நிறைய அற்புதங்கள் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மூன்றாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன. பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் நீச்ச நிலையை அடைந்தாலும் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் பெறுவது சிறப்பு. வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். பொருளாதார வளம் நிறைந்த மாதமாக இது விளங்கும். புதிய முயற்சிகள் கைகூடும். மொத்தத்தில் புதிய உற்சாகத்துடன் இந்த மாதத்தில் செயல்படுவீர்கள்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் சூரியன் குருவின் பார்வையில் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருப்பது சிறப்பு. தன வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் ராசி நாதன் சூரியன் நீச்ச நிலையை அடைந்தாலும் நீச்ச பங்க ராஜயோகம் பெறுவது சிறப்பு. கடன் தொல்லைகள் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரப்போகிறது. பங்குச்சந்தை முதலீடுகளில் திடீர் லாபம் கிடைக்கும். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். வண்டி வாகன யோகம் கை கூடி வருகிறது. வெளிநாடு யோகமும் கை கூடி வரப்போகிறது. நல்ல வேலையும் விசாவும் கிடைக்கும்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

கன்னி

அக்டோபர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கக் கூடிய அற்புதமான மாதம். நினைத்த விஷயங்கள் நிறைவேறும், ஏனென்றால் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். உங்கள் ராசியையும் ராசிநாதனையும் குரு பகவான் பார்வையிடுகிறார். புதிய முயற்சிகள் கை கூடி வரும். கடந்த கால பிரச்சினைகள் இம்மாதத்தில் முடிவுக்கு வரப்போகிறது. வேலையில் இருந்த சிக்கல்கள் விலகும். உயரதிகாரிகளால் இருந்துவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் வாங்கி பணத்தை ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள். தலைமைப் பொறுப்பு தானாக தேடி வரும். திடீர் ஜாக்பாட் அடித்தால் கூட ஆச்சரியமில்லை.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களின் ராசிநாதன் சுக்கிரன் முற்பகுதியில் நீச்ச பங்க நிலையில் 12ஆம் வீட்டில் மறைந்திருக்கிறார். எடுக்கும் முயற்சிகளுக்கு சின்னச் சின்ன தடைகள் ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதன் பின்னர் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. பிற்பகுதியில் பல சாதனைகள் புரியப்போகிறீர்கள். அதன் பிறகு புதிய திட்டங்கள் போட்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி வரும். வீடு, வாகன சேர்க்கைகள் உண்டாகும். சகோதர சகோதரிகளால் சந்தோஷம் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்லலாம். புதிய திருப்பங்கள் ஏற்படும்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… உங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது. குரு பகவான் பார்வையில் உங்கள் ராசி நிலைகொண்டுள்ளது. ராசிநாதன் செவ்வாய் பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பது மேலும் சாதகமான அம்சம். வெற்றிகள் பல தேடி வரப்போகிறது. வேலையில் அதிக உற்சாகமாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய வெற்றிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். மன நிம்மதியும் அமைதியும் நிறைந்த மாதமாக இது அமையும். சோதனைகள் சாதனைகளாக மாறும்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். நல்ல வேலை கிடைக்கும் யோகம் உண்டு. உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் தேடி வருவார்கள். மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதமாக இது அமைந்துள்ளது. வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் பல முடிவுக்கு வரும். வேலையில் இருந்த பளு தீரும். பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தீர்ந்து விடிவுகலாம் ஏற்படும் மாதமாக இது அமையும். நல்ல பலன்கள் கிடைக்கும் மாதமாக உள்ளது. குடும்பத்தில் நிகழ்ந்து வந்த குழப்பங்கள் நீங்கும். வேலையில் இருந்த மன அழுத்தங்கள் குறையும். எதையும் தைரியமாக சமாளிக்கும் மன பக்குவம் தானாக வந்து விடும். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த மாதத்தை கடந்து விடுவீர்கள்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிலும் கவனமும் நிதானமும் தேவை. எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது அதிக கவனம் தேவை. எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம், அது ஆபத்தில் கொண்டு போய் விடலாம். பண விஷயத்தில் கவனம் தேவை. ஆசையை தூண்டுபவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த மாதம் பங்குச்சந்தை, கிரிப்டோ கரன்சி போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து சிக்கிக்கொள்ள வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ளவேண்டாம். இந்த மாதத்தில் கிடைக்கும் அனுபவங்களை பாடங்களாக கற்றுக்கொள்ளுங்கள்.

அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

மீனம்

மீன ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் குருபகவான் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். உங்கள் ராசியை உச்சம் பெற்ற புதன் பகவான் பார்வையிடுகிறார். சுக்கிரன், சூரியன் ஆகியவற்றின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைகிறது. மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு சூரியனுடம், சுக்கிரனும் இடம் பெயர்ந்து வருகின்றனர். எட்டுக்கு அதிபதி சுக்கிரன் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், விபரீத ராஜயோகத்தை உங்களுக்கு தரப்போகிறார். மறைமுகமாக வருமானங்கள் வரும். திடீர் தன வரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்கப்போகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget