மேலும் அறிய

ஆன்மீகம்: 35 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் அருகே கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது.

தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 1988ம் ஆண்டு வரை வைகாசி மாத உற்சவம் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கு ஆகியவை ஏழு ஊர்களை சுற்றி வரும் விழா நடைபெற்றுள்ளது.

கால போக்கில் விழா தடைபட்ட நிலை நிலையில் தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு திருவிழா கடந்த மே 20ம் தேதி ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடைபெற்றது.

ஆன்மீகம்: 35 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் பல்லக்கு, சுவாமி கண்ணாடி பல்லக்கிலும், வெட்டி வேர் பல்லக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் பல்லாக்கில் எழுந்தருளினர், அதைப்போல் வெட்டிவேர் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். 

இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது, சிவகணங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கினை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர் பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான, வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (கரந்தை), தஞ்சைபுரீஸ்வரர் திருக்கோவில், (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் ( திருதென்குடி திட்டை),  சொக்கநாதர் திருக்கோவில்,( கூடலூர் திருக்கூடலம்பதி),  ராஜராஜேஸ்வரர் திருக்கோவில், (கடகடப்பை,  கைலாசநாதர் திருக்கோவில் (திருப்புன்னை நல்லூர்), பூமாலை வைத்தியநாதர் திருக்கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கு புறப்பட்டு சென்றன.

ஏழூர் புறப்பாடு முடிந்தது சுவாமி கோவிலுக்கு வந்தடைந்ததும் பக்தர்கள் மத்தியில் ஸ்ரீ சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் பேரூர் கட்டளை தம்பிரான் சிவப்பிரகாச அடிகளார், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் விமூர்த்தானந்தர் மற்றும் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Doctor fight | Govi Chezhian | ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? Udhayanidhi கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்புSalem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
Embed widget