Chennai Shutdown: சென்னையில் மின்தடையா (18.03.2025 ): மின்வாரியம் சொன்னது என்ன?
Chennai Power Shutdown March 18 ,2025: சென்னையில் அவ்வப்போது மின் பராமரிப்பு பணி காரணமாக, சில பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்படும்.

Chennai Power Shutdown: சென்னையில், மார்ச் 18ஆம் தேதி , மின்தடை செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது. . மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும்.
சென்னையில் நாளை மின்தடை: 18-03-2025
சென்னையில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது
ஆனால், 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால், மின் தடை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரிய வலைதள பக்கத்திலும், சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்தான அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஆகையால், மார்ச் 18 ஆம் தேதி மின்தடை இருக்காது.
பராமரிப்பு பணிகள்:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.ஆனால், தற்போது 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால், சென்னையில் மின்தடை இருக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளாது.
Also Read: TN Budget: இது வேற லெவல் அறிவிப்பா இருக்கே.! பட்ஜெட்டில் விண்வெளியில் புகுந்த தமிழ்நாடு...
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

