மேலும் அறிய

மணிரத்னம் படத்திற்கே "நோ" சொன்ன மோகன்! அவரே சொன்ன காரணம் இதுதான்!

நடிகர் மோகன் மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? என்பதற்கான காரணத்தை கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வந்தவர் மோகன். 1980 முதல் 90 காலகட்டங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையான நடிகராக உலா வந்தவர். நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, அந்த சில நாட்கள், விதி, நூறாவது நாள், மெளன ராகம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மெளனராகத்தின் தொடர்ச்சி அஞ்சலி:

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மெளனராகம். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மோகன் நடிக்கவில்லை. ஆனால், மணிரத்னத்தின் முக்கியமான படமான அஞ்சலி படத்தில் முதன்முதலில் நடிக்க கதாநாயகனாக தேர்வானது மோகனே ஆகும். ஆனால், அவர் ஒப்புக்கொள்ள மறுத்த பின்னணி குறித்து கீழே விரிவாக காணலாம். 

மெளன ராகம் படத்தின் தொடர்ச்சியாகவே உருவானது அஞ்சலி திரைப்படம். இந்த படத்தில் நாயகனாக நடிக்க மறுத்தது ஏன் என்பதை, மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினியிடம் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,

உடன்பாடு இல்லை:

நான் எப்பவுமே கதை கேட்டுதான் நடிப்பேன் என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு உண்மை. அந்த கதையில எனக்கு உடன்பாடு இல்லாத ஒரு விஷயம், அந்த ஸ்பெஷல் சைல்டை வேறு அறையில் படுக்க வைக்குறது. இப்போ இந்த கலாச்சாரத்திற்கு ஓகே. ஆனால், அப்போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவருக்கு அது சரியென்று தோன்றியது. 

இவ்வாறு அவர் கூறினார். 

மணிரத்னம் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளியான மெளன ராகம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் மோகன் - ரேவதி - கார்த்திக் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் மோகன் - ரேவதி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜோடி ஆகும். 

மணிரத்னம் 1990ம் ஆண்டு இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் ரகுவரன், ரேவதி ஜோடியாக நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஷாம்லி, விகே ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், சாருஹாசன், ஜனகராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள். அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்னி நடித்திருப்பார். இந்த படத்தில் மோகனுக்கு பதிலாக நடித்த ரகுவரனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். 

மெல்ல திறந்தது கதவு, மெளனராகம் போன்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த மோகன் 90களின் தொடக்கத்தில் வெற்றிப் படங்கள் தர இயலாமல் தடுமாறத் தொடங்கினார். 1991ம் ஆண்டு உருவம் படத்திற்கு நடிக்காமல் ஒதுங்கியிருந்த மோகன் 1999ம் ஆண்டு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கியிருந்தார். 

2008ம் ஆண்டு சுட்ட பழம் என்ற படம் மூலம் மீண்டும் நடித்தார். பின்னர், கடந்தாண்டு நடிகர் விஜய்யின் கோட் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் கம்பேக் தந்தார். மேலும், ஹரா என்ற படத்திலும் அவர் கடந்தாண்டு நடித்திருந்தார். மோகன் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget