Minister Ponmudi : மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க நினைக்கிறது ; பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!
இஸ்லாமிய சகோதரர்கள் மாமன், மச்சான் போல் பழகிக் கொண்டிருக்கிறோம்,ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சி மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க வேண்டும் என நினைக்கிறது.

விழுப்புரம் : ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சி மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க வேண்டும் என நினைக்கிறது. விழுப்புரம் மந்தகரை பகுதியில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு:
விழுப்புரம் மந்தகரை பகுதியில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்டோர கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய வனத்துறை அமைச்சர் பொன்முடி:
இஸ்லாமிய சகோதரர்கள் மாமன், மச்சான் போல் பழகிக் கொண்டிருக்கிறோம். மத வேறுபாடுகள் கிடையாது அனைவரும் அண்ணன், தம்பியாக பழகிக் கொண்டிருக்கிறோம் ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சி மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க வேண்டும் என நினைக்கிறது. அதைத்தான் நாம் எதிர்க்கிறோம். தற்போதுள்ள இஸ்லாமியர்களின் முன்னோர்கள் சமத்துவத்திற்காக இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டனர். இந்துக்களில் சாதி வேறுபாடுகள் உள்ளது ஆனால் கிறிஸ்தவத்திலும், இஸ்லாத்திலும் சாதி வேறுபாடுகள் கிடையாது. இஸ்லாமியர்கள் யாரும் அரேபியாவிலிருந்து இங்கு வந்தவர்கள் கிடைவில்லை. கிறிஸ்தவர்கள் இங்கிலாந்திலிருந்தும், அமெரிக்காவில் இருந்தும் வந்தவர்கள் கிடையாது. அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான். அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதுதான் இப்தார் நோன்பின் நோக்கம். என பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி:
தமிழ் வளர்ச்சிக்காக உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஏன் ரூ என்ற எழுத்தை பயன்படுத்தினீர்கள் என கேட்கிறார்கள். மும்மொழி கொள்கையை புகுத்த பார்க்கிறார்கள். ரூபாய் பயன்படுத்துவதில் எந்த தவறும் கிடையாது. மொழி வளர்ச்சிக்காக பாடுபடுவது தான் திராவிடம் மாடல் ஆட்சி. விக்கிரவாண்டி ஒரு அரசு கலைக் கல்லூரியும். திருக்கோவிலூர் அருகில் உள்ள மாயனூர் கிராமத்திலும் முந்தைய வருட சாரம் பகுதியிலும் சிப்காட் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்டத்தில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களான அனைவரும் வளர வேண்டும் என்பதுதான் திராவிடம் மாடல் அரசின் நோக்கம். அதைத்தான் நிதிநிலை அறிக்கைகள் முதல்வர் அறிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

