Sengottaiyan vs EPS : OPS-வுடன் ரகசிய சந்திப்பு!அடித்து ஆடும் செங்கோட்டையன்!மரண பீதியில் எடப்பாடி!
ஒட்டுமொத்த அதிமுகவும் திமுகவின் பட்ஜெட்டை புறகணித்து, சட்டமன்றத்திலிருந்து வெளியேற.. செங்கோட்டையன் மட்டும் வெளியேறாமல் ஓ.பி.எஸ்ஸுடன் சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த சம்பவம் தான் தற்போது அதிமுகவிற்குள் சூறாவளியை வீச செய்துள்ளது..
இந்நிலையில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்று, ஓ.பி.எஸ்ஸுடன் ரகசிய சந்திப்பை செங்கோட்டையன் நிகழ்த்தி உள்ளதாக வெளியாகும் தகவல் தமிழக அரசியலில் பல்ஸை எகிற வைத்துள்ளது..
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் அரசியல் செய்து, ஜெ அணி, ஜா அணி என்று அதிமுக உடைந்தது வரை அனைத்தையும் பார்த்தவர் அதிமுகவின் சீனியரான செங்கோட்டையன். ஓபிஎஸ் தனியாக தர்மயுத்தம் செய்த போது, முதலமைச்சர் பதவியே முதலில் செங்கோட்டையனை தான் தேடி வந்தது. அத்தகைய முக்கியதுவம் வாய்ந்த செங்கோட்டையன் தான் தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளார்.
அத்திகடவு அவினாசி திட்டதிற்காக எடப்பாடி பழனிசாமியை பாராட்டி நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்பதை புறகணித்து தன்னுடைய ஆட்டத்தை தொடங்கினார் செங்கோட்டையன். அதன் பின் இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடப்படக்கூடிய என்னை சோதிக்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பின் இந்த விவகாரம் அப்டியே அடங்கி போக, செங்கோட்டையனை சரிகட்டிவிட்டார் எடப்பாடி என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் சட்டமன்றத்தில், தன்னுடைய அடுத்த ஆக்ஷனை நிகழ்த்தியுள்ளார் செங்கோட்டையன்.
காலம் காலமாக சட்டமன்றம் கூடுவதற்கு முன், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அதிமுகவின் சார்பில் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் தான் பட்ஜெட்டிற்காக சட்டமன்றம் கூடிய நிலையில், அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி அதிமுக எம்.எல்-க்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் தான் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறையில் 14ம் தேதி காலை 8.45 மணி அளவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. ஆனால் கூட்டம் தொடங்கிய பிறகே தன்னுடைய வீட்டிலிருந்து புறப்பட்டு சட்டமன்றத்திற்கு வந்த செங்கோட்டையன், நேரடியாக சபாநாயகர் அப்பாவுவை சென்று சந்தித்தார். அந்த சந்திப்புமே ஏன் நடந்தது, செங்கோட்டையன் தனியாக சென்று சபாநாயகரை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகளை எழுப்ப தான் செய்கின்றன. இது ஒருபக்கம் இருக்க, சில நிமிட சந்திப்பிற்கு பிறகு சட்டமன்றத்திற்குள் சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார் செங்கோட்டையன். அதன் பிறகே அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்திற்குள் வந்தனர்.
இந்நிலையில் அதன் பிறகு நடந்தது தான் ஹைலைட். சட்டமன்றம் தொடங்கியதும், டாஸ்மாக்கில் நடந்த அமளாக்கதுறை சோதனை குறித்து கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமி கூச்சலிட, அதிமுகவினர் அனைவரும் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் அவர்களின் மைக்கை ஆப் செய்தார் சபாநாயகர் அப்பாவு, ஆனால் இது அனைத்தையும் பொறுட்படுத்தாத செங்கோட்டையன் தன்னுடைய இறுக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.
கூச்சலிட்டு கொண்டிருந்த அதிமுகவினருக்கே, இவர் என்ன யாரோ ஒருவர் யாரோடோ சண்டை போடுவது போன்று அமர்ந்திருக்கிறாரே என்று அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவையை புறகணித்து எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலிருந்து வெளியேற, அனைத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களும் வெளியேறினர். ஆனால் செங்கோட்டையன் மட்டும், எழுந்து செல்லாமல் தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அதன் பின் சற்று நேரத்தில் ஓ.பி.எஸ் அவையிலிருந்து வெளியேற, அதன் பின்னே செங்கோட்டையனும் அவையிலிருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருமே ரகசிய சந்திப்பு நடத்தியதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
மேலும் இன்று காலையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறகணித்த செங்கோட்டையன், திட்டமிட்டே எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். இது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லாமல் சென்றார் அவர்.
இந்நிலையில் இது அனைத்துமே எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு செல்ல, சூடேரி போன அவர் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, செங்கோட்டையன் வரவில்லை என்றால் அவரிடம் போய் கேளுங்கள்.. தனிப்பட்ட பிரச்சனையெல்லாம் எங்கே கேக்காதீங்க என்று ஆவேசமாக பதிலளித்தார். இதன் மூலம் அதிமுகவுக்குள் அனைத்தும் சுமூகமாக இல்லை, நாளுக்கு நாள் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகரித்து வருகிறது என்பதை காட்டும் விதமான நிகழ்வுகள் நடைப்பெற்று வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், இது போன்ற ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு செங்கோட்டையனின் செயல்பாடுகள் கேட்டை திறந்துவிட்டுள்ளது. இதனை எப்படி எதிர்க்கொண்டு தப்பிக்க போகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி தான் தற்போதைய தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.





















