மேலும் அறிய
SAFF Championship: தெற்காசிய கால்பந்து போட்டியில் லெபானானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய கால்பந்து அணி!
SAFF Championship: SAFF சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் லெபானானை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்கள்
1/6

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டியில் லெபனான் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.
2/6

போட்டி தொடங்கியது முதலே இந்தியா- லெபனான் அணிகள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியது.
3/6

நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது, ஆனால் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.இதையடுத்து இந்த போட்டியானது பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு செய்யப்பட்டது.
4/6

கிடைத்த முதல் வாய்ப்பிலேயே இந்திய அணிக்கு கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அதனை தொடர்ந்து பெனால்டி முறையில் இந்திய அணி கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றி அசத்தியது.
5/6

பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய கால்பந்து அணி SAFF சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
6/6

அடுத்ததாக SAFF சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி குவைத் அணியை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி குவைத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Jul 2023 11:05 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement