மேலும் அறிய

அதிமுக-வை எச்சரித்த ஃபார்வர்டு பிளாக்: அரசியலில் அடுத்த பரபரப்பு... காரணம் இதுதான்..!

திமுக கூட்டணியில் பார்வேர்ட் பிளாக் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்போம் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கர்ணன், கலந்துகொண்டார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது; தங்கள் கட்சி இந்தியா கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும், அதிமுக தங்கள் கட்சியின் பெயரையோ அல்லது கொடியையோ பயன்படுத்தக் கூடாது எனவும் மேலும், பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தனது கட்சியின் நிலைப்பாட்டையும் அவர் தெளிவுபடுத்தினார்.

"அதிமுகவை வன்மையாகக் கண்டிக்கிறோம்"

எங்களுடைய அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணியில் தான் உள்ளது. அதேபோல், தமிழகத்திலும் இந்தியா கூட்டணியாகவும், அதற்குத் தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியிலும் தான் நாங்கள் உள்ளோம். ஆனால், சமீபகாலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தாங்கள் கூட்டணியில் இருப்பதாகப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் கட்சியின் பெயரையோ, எங்கள் கொடியையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயன்படுத்தக் கூடாது" என்று எச்சரிக்கை விடுத்த அவர், தொடர்ந்து இதுபோல் நடந்தால், தாங்கள் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.


அதிமுக-வை எச்சரித்த ஃபார்வர்டு பிளாக்: அரசியலில் அடுத்த பரபரப்பு... காரணம் இதுதான்..!

திருநெல்வேலி கொலை வழக்கு குறித்த விவாதம்

சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த இளைஞர் கொலை வழக்கில், கொலை செய்த சுஜித்தின் தாய் மற்றும் தந்தையரைக் கைது செய்ய வலியுறுத்தி, ஜான் பாண்டியன்  பேசியது குறித்த கேள்விக்கு "இரண்டு அமைச்சர்கள் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஜான் பாண்டியன் அவ்வாறு பேசியுள்ளதாக அறிகிறேன். இது மிகவும் தவறானது. கொலை செய்தால் எவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பது காவல்துறையில் உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படி இருக்கும் சூழ்நிலையில், அவர்கள் கொலை செய்யத் தூண்டியிருக்க வாய்ப்பில்லை. சுஜித் மட்டுமே கொலை செய்ததாகக் காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு, காவல்துறையில் பணிபுரியும் அவரது தாய், தந்தை மீது வழக்குப்பதிவு செய்தால், அவர்களை விடுவிக்கக் கோரி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி மற்ற சமூக இயக்கங்களுடன் இணைந்து மாநில அளவில் போராட்டங்களை முன்னெடுக்கும்.


அதிமுக-வை எச்சரித்த ஃபார்வர்டு பிளாக்: அரசியலில் அடுத்த பரபரப்பு... காரணம் இதுதான்..!

கள்ளர் பள்ளி, கல்லூரிகளின் பெயர்கள் மாற்றம் கூடாது

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட கள்ளர் பள்ளி, கல்லூரி, விடுதி உள்ளிட்ட அமைப்புகளின் பெயர்களை மாற்றக்கூடாது. "இது எங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த நிதியால் உருவாக்கப்பட்டதாகும். அதன் பெயரை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது. இதற்காக நாங்கள் முதலமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். கவுரவக் கொலைக்குத் தனிச் சட்டம் கோருவது அபத்தம்
கவுரவக் கொலைக்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோருவது குறித்துக் கர்ணன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.


அதிமுக-வை எச்சரித்த ஃபார்வர்டு பிளாக்: அரசியலில் அடுத்த பரபரப்பு... காரணம் இதுதான்..!


"இது ஒரு அபத்தமான செயல். ஏற்கனவே தூக்கு தண்டனை மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் இருக்கும்போது, இறந்தவரை மீண்டும் தூக்கிலிட முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். "ஏற்கனவே போதுமான சட்டங்களும், தண்டனைகளும் உள்ளது. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பிட்ட சாதிக்காக நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால், வரும் தேர்தலில் தென் மாவட்டங்களில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று அவர் சூளுரைத்தார். வரும் தேர்தலில் ஐந்து தொகுதிகள் கேட்போம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என்றும், குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளைக் கேட்போம் "தற்போது நாங்கள் பத்து தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
"ஒரே கூட்டணி.. ஒரே தொகுதி.. ஆனால் இரண்டு வேட்பாளர்கள்!
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார் - வி.ஜி.கே. செந்தில்நாதன்
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார் - வி.ஜி.கே. செந்தில்நாதன்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Slams EPS: “சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
“சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
GOLD SILVER RATE Apr.1: ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Trichy KN Nehru Speech: “ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
“ஆணையிடுங்கள் ஸ்டாலின்“; திருச்சியில் 9 தொகுதிகளிலும் திமுக வெல்லும்; சபதமெடுத்த கே.என். நேரு
Trump Iran War Hormuz: “தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
“தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
Embed widget