மேலும் அறிய
CM Stalin : சூறாவளி சுற்றுப்பயணத்தில் முதல்வர் ஸ்டாலின்.. அடுத்து எங்கு செல்கிறார்?
CM Stalin : திருமாவளவன் ஆதரவு பெற்ற வேட்பாளர் ரவிக்குமாருக்கும் கடலூரில் போட்டியிடும் விஷ்னு பிரசாந்துக்கும் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
1/5

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்னுபிரசாந்த் ஆகிய இரு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
2/5

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எம் ஆர்கே பன்னீர்செல்வம், ஏ வ வேலு, செஞ்சி மஸ்தான், சிவி கணேசன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திரளான திமுக கூட்டணி தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
3/5

திருமாவளவன் ஆதரவு பெற்ற வேட்பாளர் ரவிக்குமார், எழுத்தாளர் , பத்திரிக்கையாளர், களப்போராளி, பன்முக திறமை கொண்ட வேட்பாளராக சிறப்பாக செயல்படுகிற அவருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுவதாக கூறினார்.
4/5

கடலூரில் போட்டியிடும் விஷ்னு பிரசாந்த்துற்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுவதாகவும் தமிழ்நாட்டின் குரலாக ஒளிக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
5/5

விழுப்புரம், கடலூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், இன்று கடலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்குபெறவுள்ளார்.
Published at : 06 Apr 2024 11:13 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
விழுப்புரம்
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion