மேலும் அறிய

Chennai AC Local Train: பீச் To செங்கல்பட்டு ஏசி ட்ரெயின்.. ரயில் டைம்மிங் என்ன ? எங்கெங்கு நிற்கும் தெரியுமா ?

Chennai AC Local Train Timings: சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை ஏசி ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின் முக்கிய போக்குவரத்துக்காக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்தாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கும் ரயில் போக்குவரத்து மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. 

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழிப்பாதை Chennai Beach To Chengalpattu 

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் வழித்தடம், மிகவும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள், இந்த வழித்தடத்தில் பயணம் செய்து வருகின்றனர். 

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக இந்த வழித்தடம் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

பொதுமக்கள் எதிர்பார்ப்பு 

இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில், இதுபோன்ற மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடத்தில், ஏசி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று சென்னையிலும் ஏசி இரவில் இயக்க வேண்டும் என கோரிக்கையில் எழுந்தது.

சென்னை ஏசி ரயில் - Chennai Local AC Train 

சென்னை ஐ.சி.எப். ஆலையில் ரயில்வே துறை சார்பில், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன மின்சார ரயில் தயாரிக்கப்பட்டது.

சென்னை ஏசி ரயில் சிறப்பம்சங்கள் என்ன ? Chennai AC Local Train Key Features 

பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை ஏ.சி ரயிலில், 12 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும். இந்த ரயில் வண்டியில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் 5,500 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது. அதேபோன்று தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. ஏ.சி ரயிலில் படியில் பயணம் செய்வது தவிர்க்கப்படும் . 

இதேபோன்று ரயில் பயணத்தின்போது குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் நேரடியாக ரயில் ஓட்டுநரிடம் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

ரயில் அட்டவணை - Ac Train Timing

சென்னை ஏ.சி ரயில்கள் அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு, காலை 7 மணி, பகல் 3.45 மணி, இரவு 7.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45க்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்றும் தெரிகிறது. அதேபோன்று தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்பாட்டிற்கு வருவது எப்போது ?

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை, ஒரு சில ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையே, அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ஏசி ரயில்கள் நின்று செல்லும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சனிக்கிழமைகளையும் ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் இறுதிக்குள், ரயில் இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
Aadhaar Card Misuse: மும்பை மூதாட்டிக்கு வந்த போன் கால்.. ரூ.20 கோடி அபேஸ்.. நடந்தது என்ன.?
மும்பை மூதாட்டிக்கு வந்த போன் கால்.. ரூ.20 கோடி அபேஸ்.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
Aadhaar Card Misuse: மும்பை மூதாட்டிக்கு வந்த போன் கால்.. ரூ.20 கோடி அபேஸ்.. நடந்தது என்ன.?
மும்பை மூதாட்டிக்கு வந்த போன் கால்.. ரூ.20 கோடி அபேஸ்.. நடந்தது என்ன.?
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
Embed widget