மேலும் அறிய
மாமல்லபுரத்தில் நடனமாடிய ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்!
மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வருகை தந்த ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நடனம் ஆடி மகிழ்ந்தார்.

ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா மாகாண சபாநாயகர்
1/8

ஜப்பான் நாட்டில், உள்ள ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தலைமையில் அம்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மாமல்லபுரம் வந்தனர்
2/8

கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் மலர் மாலை அணிவித்து, கரகாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஹிரோஷிமா சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
3/8

அப்போது கரகாட்ட இசைக்கலைஞர்கள் மேளம் அடித்து கரகாட்டம், மயிலாட்டம் ஆடினர். அப்போது கரகாட்ட இசையில் மெய்மறந்து ரசித்த ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி அந்த இசைக்கலைஞர்கள் ஆடியதுபோது, தான் ஒரு சபாநாயகர் என்பதை கூட மறந்த உற்சாகத்தில் கோட்-சூட்டுடன் குத்தாட்டம் ஆடி மகிழ்ந்தார்.
4/8

அப்போது நகாரா கோஜி என்ற பாராளுமன்ற உறுப்பினர் தன் தலையில் கரகம் வைத்து ஆடி அழகு பார்த்தார். அப்போது சுற்றுலா வந்த சக பயணிகள் ஒரு சபாநாயகர் என்பதை கூட மறந்து ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் குத்தாட்டம் ஆடியதை பார்த்து ரசித்தனர்
5/8

பிறகு அவர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்கு நடந்து சென்று கடற்கரை கோயில் சிற்பங்களை பார்த்து ரசித்தனர்.
6/8

அப்போது மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களின் வரலாற்று தகவல்களை உடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அவர்களுக்கு ஜப்பான் மொழியில் விளக்கி கூறினார்
7/8

பிறகு மாமல்லபுரம் கடற்கரை கோயில் சிற்பங்களை சுற்றி பார்த்த ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் மற்றும் அம்மாகாண பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலோகத்தால் ஆன கடற்கரை கோயில் சிற்பம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
8/8

ஜாலியாக குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்
Published at : 02 Dec 2023 12:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion