மேலும் அறிய
Seanz Cruise : ECR இல் இனி நீங்க மிஸ் பண்ண கூடாத ஸ்பாட்..! பாக்கவே செமையா இருக்கே!
Muttukadu floating restaurant : தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் மிதவை உணவக கப்பல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

முட்டுக்காடு மிதக்கும் உணவகம்
1/9

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது.
2/9

முட்டுக்காடு படகை இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார்.
3/9

தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) இதுவாகும். இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்படும். நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
4/9

முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
5/9

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.
6/9

இந்தப் படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள், வேகமான இயந்திரப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
7/9

பொதுமக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பணி முடிவுற்ற பிறகு மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் , சில வாரங்களில் நிறைவடையும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
8/9

இந்த உணவகம் மாலை மற்றும் இரவு நேரங்களில் செயல்பட உள்ளது. குழுவாக உணவு அருந்த விரும்புபவர்கள், நண்பர்களுடன் உணவு அருந்த விரும்புபவர்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், லைவ் பேண்ட் ( Live Band ) , இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த உணவகத்தை பயன்படுத்தலாம்
9/9

இரவு நேரத்தில் செயல்படும் உணவகம் என்பதால், கண்ணுக்கு இனிமையான மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன
Published at : 01 Jun 2024 10:40 AM (IST)
Tags :
@chennaiமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion