மேலும் அறிய
Jigarthanda DoubleX : முத்து, ஆர்.ஆர்.ஆர் வரிசையில் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்.. நிரம்பி வழியும் தியேட்டர்கள்!
Jigarthanda DoubleX : சினிமாவை அழகாக காட்டுவது ஒரு பக்கம் என்றால், யானைகள், மலை வாழ் மக்கள், சிறுதெய்வங்கள், அரசியல் என அனைத்தையும் நுணுக்கமாக காட்டியது மற்றொரு பக்கம்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஜப்பான் வெளியீடு
1/6

ஜிகிர்தண்டாவின் முதல் பாகத்தை தொடர்ந்து, இரண்டாவது பாகமான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியானது.
2/6

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. வழக்கமான கார்த்திக் சுப்பராஜின் சம்பவத்தை விட இது சற்று வித்தியாசமாகவே இருந்தது.
3/6

சினிமாவை அணு அணுவாக விரும்பி, ஒரு நாள் தானும் பெரிய நடிகராக வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் லாரன்ஸையும் சந்தர்ப சூழ்நிலையால் சரியான இடத்தில் சிக்கும் எஸ்.ஜே.சூர்யாவையும், சினிமா மூலம் இணைத்த விதம் பிரமாதம்.
4/6

ஆரம்பக்கட்டத்தில் இயக்குநராக தன்னை காட்டிக்கொள்ளும் ரே தாசன், காலப்போக்கில் அதுவாகவே அவர் ஆகிறார். அதை அவர் விரும்புகிறார். அவருக்குள் இருக்கும் கலையும் கலைஞனும் இக்கட்டான சூழலில் வெளிவரும்படியான காட்சி இன்றியமையாதது. மலையரசி, இரத்தன குமார், செட்டாணி, ஜெயக்கொடி, பைங்கிளி, கார்மேகம், லூர்த் ஆகிய கதாபாத்திரங்களையும் வலுவாக எழுதியிருந்தார் சுப்பராஜ்.
5/6

சினிமாவை அழகாக காட்டுவது ஒரு பக்கம் என்றால், யானைகள், மலை வாழ் மக்கள், சிறுதெய்வங்கள், அரசியல் என அனைத்தையும் நுணுக்கமாக காட்டியது மற்றொரு பக்கம்.
6/6

இந்நிலையில், முத்து, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களை அன்புடன் வரவேற்ற ஜப்பான் மக்களின் மண்ணில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
Published at : 29 Apr 2024 06:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement