மேலும் அறிய

H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக

விஜய் அவர்களின் வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, தமிழக வெற்றிக் கழகத்தின் தொடர் நிகழ்வுகளில் நிலவி வரும் பாதுகாப்பு குளறுபடிகள் மற்றும் ஒழுங்கீனங்கள் குறித்து தனது  கவலையைத் தெரிவித்துள்ளார்.

தொடர்கதையாகும் துயரங்கள்:

இது குறித்து எச்.ராஜா கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியான வடு இன்னும் ஆறாத நிலையில், இன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்விலும் அதே போன்றதொரு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. விஜய் அவர்களின் வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தற்செயலானவை என்பதைத் தாண்டி, முறையான திட்டமிடல் இல்லாததையே காட்டுவதாக எச். ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆவேச கூட்டம்

தஞ்சை மாநாட்டு திடலில் பாதுகாப்பு வேலிகளைத் தகர்த்துக்கொண்டு இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடி வரும் காட்சிகள், அங்கு நிலவிய பாதுகாப்பு குறைபாட்டைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. தவெக நடத்தும் நிகழ்ச்சிகளில் தனி மனித கட்டுப்பாடோ, துல்லியமான திட்டமிடலோ எதுவுமே பின்பற்றப்படாமல் ஒழுங்குமுறையற்ற ஒரு ஆவேச கூட்டம் நடைபெறுவது போலவே இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதோடு, தொண்டர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது.

இது விஜயின் கடமை

தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் தனது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் வெறும் உணர்ச்சியூட்டும் உரைகளை மட்டும் வழங்காமல், வாழ்வியல் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். சாலையில் செல்லும்போதும், பொது இடங்களில் கூடும்போதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காதவாறு, பக்குவத்தோடு கட்சியினர் நடந்து கொள்வதற்கான உளவியல் ரீதியான மாற்றத்தை தலைமையே முன்னெடுக்க வேண்டும்.

பெற்றோர்களின் மத்தியில் அச்சம்:

கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் நிலவுவது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. இளைஞர்களின் பெற்றோர்கள் ஒருவித அச்சத்துடனேயே இருப்பதை இனி வரும் காலங்களில் தவிர்க்கும் வகையில், தவெக தலைமை தனது தொண்டர்களை நெறிப்படுத்த வேண்டும். பொது அமைதிக்கு ஊறு விளைவிக்காமல் அரசியல் பணிகளை மேற்கொள்வதே ஒரு முதிர்ச்சியான இயக்கத்திற்கு அடையாளம் என திரு. எச். ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
குண்டுவீச்சு: கூட்டணி தலைவர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட துப்பில்லையா? அன்புமணி கேள்வி
குண்டுவீச்சு: கூட்டணி தலைவர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட துப்பில்லையா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Euthanasia: கொன்னுக்கோங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுக்கோங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Embed widget