மேலும் அறிய

பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!

பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல் - தண்ணீர் பிரச்னை தீருமா?

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு மாதம் கடந்தும் தென் பெண்ணையாறு மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைக்கவில்லை. உடனே தீர்ப்பாயத்தை அமைக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

 இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வட தமிழ்நாட்டில் “வெண்ணை உருகும் முன் பெண்ணை உருகும்” என்ற சொலவடை உண்டு. வெண்ணை உருகும் கால அவகாசத்திற்குள் பெண்ணையாற்றின் மணல் உருகும் அளவிற்கு வெகு வேகமாக தண்ணீர் வரத்து இருக்கும் என பொருள்படும்படி கூறினார்கள்.

நீர்ப்பிடிப்பு பகுதிகள்

கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை 391 கிமீ தூரம் கடந்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கிமீ ஆகும்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி சாலை, நாச்சிக்குப்பத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில், கர்நாடக வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி யார்கோள். இங்கு கட்டப்பட்டுள்ள யார்கோள் அணையின் நீளம் 1,410 அடி, உயரம் 164 அடி. நதிநீர் பங்கீடு விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட இந்த அணை மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற எண்ணத்தில், மதகுகள் இன்றி 164 அடி உயரத்திற்கு நீர் தேக்கும் வகையில், பெரிய தடுப்பணையாக கட்டப்பட்டுள்ளது.

குறைந்த நீர்வரத்து 

அணையின் மொத்த கொள்ளளவு 50 கோடி கன அடி. அதாவது அரை டி.எம்.சி., இந்த அணையின் மொத்த கொள்ளளவும் எட்டப்பட்டால் மட்டுமே, தண்ணீர் தென்பெண்ணையாற்றுக்கு வரும். முன்னதாக கோலார் மாவட்டத்தில் உள்ள பெத்தமங்கலம், ராம்சாகர் உள்ளிட்ட இடங்களில், கர்நாடக அரசு ஏற்கனவே தடுப்பணைகளை கட்டியதால், மார்க்கண்டேய நதிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள யார்கோள் அணை நிரம்புவதற்கே சாத்தியமில்லாத சூழலில், தமிழகத்திற்கு மார்கண்டேய நதி நீர் வர வாய்ப்பில்லை. யார்கோள் அணையை கட்ட 2006-ல் முடிவு செய்த கர்நாடக அரசு, 2007-ல் அனுமதி வழங்கியது. 2009-ல் அனைத்து துறை அனுமதியுடன் அணை கட்டும் பணி துவங்க இருந்த நிலையில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கொரோனா சமயத்தில்...

கொரோனா ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி, சத்தமில்லாமல் அணையின் 90 சதவீத பணிகளை, கர்நாடக அரசு முடித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு 2018-ல் வழக்கு தொடர்ந்தது.அதில், ‘1892 மற்றும் 1933-ல் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள்படி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் பெண்ணையாறு நதியின் குறுக்கே அணை அல்லது தடுப்பணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமை இல்லை.

அணை, தடுப்பணை கட்டினால், தமிழகத்துக்கான நீர் வரத்து குறைந்து விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதில் தீர்வு ஏற்படுத்துவதில் மத்திய அரசு தரப்பில் திட்டவட்ட நடவடிக்கை தேவைப்படுகிறது என்று வலியுறுத்தப்பட்டது.

முன்னர் நடந்த விசாரணைகளின்போது, கர்நாடகா தரப்பில், ‘குடிநீர் தேவைக்காகவே அணை, தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இது, பழைய ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கை அல்ல' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில், 'மத்திய அரசு பிரதிநிதி முன்னிலையில், இரு மாநிலங்களின் அமைச்சர்கள் மூலம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டது. நேரடி பேச்சு வார்த்தை முயற்சிகளில் எந்த பலனும் இல்லாததால், தீர்ப்பாயம் அமைக்க தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இது தொடர்பான விசாரணை 2023-ல் நடந்த போது, மத்திய அரசு தரப்பில், 'பெண்ணையாறு நதிநீர் பங்கீடு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின், தீர்ப்பாயம் அமைக்கப்படும்' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதுபற்றி சில விசாரணைகளை நடத்தி சில ஆலோசனைகளை வழங்கிய உச்சநீதிமன்றம் 2025 டிசம்பரில் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம்நாத், என்.வி.அன்ஜாரியா கொண்ட பெஞ்ச், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ‘தமிழகம், கர்நாடகா இடையிலான பெண்ணையாறு நதிநீர் பங்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை, மத்திய அரசு ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒருமாதத்தை கடந்தும் இன்னமும் மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைக்காமல் இருப்பது தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதாகவே பார்க்க முடிகிறது. எனவே உடனே மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைக்கவேண்டும்’’ என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget