மேலும் அறிய

T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!

T20 WC 2026 Semi Final SA vs NZ: டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதி வருகின்றனர்.

T20 WC 2026 Semi Final SA vs NZ: டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான அரையிறுதி மோதலுக்கு நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து - இந்தியா அணிகள் தகுதி பெற்ற நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி நடக்கிறது.

அரையிறுதி

இந்த போட்டியில் ஒரு முறைகூட டி20 சாம்பியன் பட்டத்தை வெல்லாத தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இந்த மைதானத்தில் இந்தியா கடைசியாக ஆடிய போட்டியில் 196 ரன்களை சேஸ் செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனால், நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றில் இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகளாகவே களமிறங்குகின்றனர். 

அணி விவரம்:

நியூசிலாந்து அணியில் கேப்டன் சான்ட்னர் தலைமையில் ஃபின் ஆலன், டிம் செய்ஃபர்ட், ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மன், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், மெக்கன்சி, மேட் ஹென்றி மற்றும் ஃபெர்குசன் களமிறங்குகின்றனர்.

தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம் தலைமையில் டி காக், ரிக்கெல்டன், ப்ரெவிஸ், டேவிட் மில்லர், ஸ்டப்ஸ், யான்சென், கார்பின் போஸ்ச்,  ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

பேட்டிங் பலம் எப்படி?

பேட்டிங்கைப் பொறுத்தமட்டில்  தென்னாப்பிரிக்க அணியில் மார்க்ரம் - டி காக் சிறப்பான தொடக்கம் தர வேண்டியது அவசியம். இவர்கள் அதிரடியாக ஆடினால் இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம். ரிக்கெல்டன், ப்ரெவிஸ் அதிரடியை காட்டினால் தென்னாப்பிரிக்கா மேலும் வலுவாகும். மிடில் ஆர்டரில் டேவிட் மில்லரின் அனுபவம் தென்னாப்பிரிக்காவிற்கு பக்கபலமாக அமையும். 

நியூசிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் இலக்கை நோக்கி களமிறங்கும் அவர்களுக்கு டிம் செய்ஃபர்ட், ஃபின் ஆலன் அதிரடி தொடக்கம் தர வேண்டியது அவசியம். அப்போதுதான் இலக்கை நோக்கி சிரமமின்றி முன்னேற முடியும். ரச்சின் ரவீந்திரா அசத்தலாக ஆட வேண்டியது அவசியம். அனுபவ வீரர் மிட்செல்லின் அதிரடி நியூசிலாந்திற்கு இந்த போட்டியில் அவசியம். மிடில் ஆர்டரில் கேப்டன் சான்ட்னர் நியூசிலாந்தை தாங்கி நிற்கிறார்.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்தினால் மட்டுமே நியூசிலாந்தால் இலக்கை எளிதாக எட்ட முடியும். மேட் ஹென்றி, ஃபெர்குசன் வேகத்தில் மிரட்ட காத்துள்ளனர். ரச்சின் ரவீந்திரா, சான்ட்னர், மெக்கன்சி சுழல் ஆதிக்கம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்மி நீஷம் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தும் ஆற்றல் கொண்டவர்.

இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் பந்துவீச்சில் திறமையை காட்ட வேண்டியது இரு அணிக்கும் சவாலான ஒன்றாகும். இதனால், திறமையாக விளையாடி இறுதிப்போட்டிக்குச் செல்லவே இரு அணிகளும் முழு முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பதால் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
Sam Curran:
Sam Curran: "அன்று கம்மின்ஸ், இன்று நான்" மீண்டும் ஒரு 'சைலண்ட்' சவால்! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!
IPL Schedule: ஐபிஎல் திருவிழா..! எப்போது தொடங்குகிறது? முதல் போட்டி RCB Vs CSK? முழு அட்டவணை விவரங்கள்
IPL Schedule: ஐபிஎல் திருவிழா..! எப்போது தொடங்குகிறது? முதல் போட்டி RCB Vs CSK? முழு அட்டவணை விவரங்கள்
Sanju Samson: சஞ்சு சாம்சனுக்கு அரையிறுதியில் விளையாட தடையா? அரையிறுதிக்கு முன்பே இந்திய அணிக்கு அதிர்ச்சி..
Sanju Samson: சஞ்சு சாம்சனுக்கு அரையிறுதியில் விளையாட தடையா? அரையிறுதிக்கு முன்பே இந்திய அணிக்கு அதிர்ச்சி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
Embed widget