மேலும் அறிய
Heeramandi Netflix Series : பிரம்மாண்டமான நெட்ஃபிளிக்ஸ் தொடர்... ஹீரமண்டி எதை பற்றிய கதை?
Heeramandi Netflix Series : இந்த பிரம்மாண்ட தொடரில் மனிஷா கொய்ராலா சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக், ஷர்மின் சேகல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹீரமண்டி தொடர்
1/6

பாலிவுட் திரையுலகில் பரிண்டா எனும் படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்த சஞ்சய் லீலா பன்சாலி, 1942 : ஏ லவ் ஸ்டோரி எனும் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார்.
2/6

அவரின் திரைப்பயணம் காமோஷி : தி மியூசிக்கல் எனும் படத்தில் தொடங்கி இன்று வரை ஓயாமல் இருக்கிறது.
3/6

தேவ்தாஸ், ராம்-லீலா, மேரி கோம், பாஜிராவ் மஸ்தாணி, பத்மாவத், கங்குபாய் கத்தியாவாடி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் எடுக்கும் பல படங்களில் பிரம்மாண்ட நடனக்காட்சி இடம்பெற்று இருக்கும்.
4/6

பழங்காலத்தில் நகரும் கதைகளை எடுப்பதில் வல்லவராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது முதன்முறையாக ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் எனும் வெப் தொடரை இயக்கவுள்ளார்.
5/6

இந்த பிரம்மாண்ட தொடரில் மனிஷா கொய்ராலா சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக், ஷர்மின் சேகல் ஆகியோர் நடித்துள்ளனர். ஹீரமண்டி வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியானது.
6/6

சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Feb 2024 12:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement