மேலும் அறிய
TN Roundup: திமுக - காங்., பேச்சுவார்த்தை, எகிறிய தங்கம், ஸ்டாலின் கட்டளை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி - இன்றிரவு சென்னை வரும் பிரதமர், நாளை (மார்ச் 1) மதுரை, புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் செல்ல உள்ளதாகவும் தகவல்
- காங்கிரஸ் கட்சியுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குகிறது திமுக
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
- இந்த தேர்தலில் 2 கோடியே 50 லட்சம் வாக்குகள் வாங்கியே ஆக வேண்டும் - தி.மு.க. பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு
- விஜயின் தனிப்பட்ட விஷயத்தை அரசியல்படுத்த நான் விரும்பவில்லை - விஜய் குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்
- மனிதநேய ஜனநாயக கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக இன்று(பிப்.28) பேச்சுவார்த்தை
- பொது இடங்களில் புகைப்பிடிக்கும் தடை செய்யும் சட்டத்தை கொண்டுவரும் போது நான் தனியாக இருந்தேன்.. எனக்கு சப்போர்ட்டா இருந்தவரு மன்மோகன் சிங் மட்டும் தான் - அன்புமணி ஓபன் டாக்
- சென்னை எழும்பூரிலிருந்து இன்று (பிப்.28) இரவு 10.45 மணிக்கு புறப்படவிருந்த சாந்த்ரகாச்சி சிறப்பு ரயில் 1.10 மணி நேரம் தாமதமாக இரவு 11.55 மணிக்கு புறப்படும் என தெரிவிப்பு
- கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம்
- ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைந்ததால் தே.ஜ.கூட்டணியில் எந்த பாதிப்பும் இருக்காது - பாஜக செயற்குழு உறுப்பினர் சரத்குமார்
- கோலாகலமாகத் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா..! இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..
- தவெக தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டுமென்று ஈரோட்டில் அக்கட்சியின் சார்பில் விளக்குபூஜை
- விசில் அடிக்கிறவர் படமே இன்னைக்கு ரிலீஸ் ஆக மாட்டேங்குது - அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























