மேலும் அறிய

Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று

Top 10 News Headlines Today Feb 5th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

திமுக - காங்., இன்று பேச்சுவார்த்தை

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக பேச்சுவார்த்தைக் குழுவை சந்தித்து, கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்.. குழு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!
இன்றிரவு சென்னை வரும் பிரதமர், நாளை (மார்ச் 1) மதுரை, புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் செல்ல உள்ளதாகவும் தகவல்.

திமுக கூட்டணியில் புதிய கட்சி

திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இன்று இணைகிறது SDPI கட்சி. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்க உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் SDPI போட்டியிட்டு இருந்தது.

ஏவுகணை சோதனை வெற்றி

DRDO அமைப்பால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகவும் குறுகிய தூர விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் (VSHORADS) சோதனைகள் வெற்றி. ஒடிசாவின் சந்திப்பூரில் நடந்த பரிசோதனைகளில் பல்வேறு வேகம், தூரம் மற்றும் உயரத்தில் பறக்கும் அதிவேக விமான இலக்குகளை இந்த ஏவுகணை துல்லியமாகக் கண்டறிந்து தாக்கி அழித்துள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு
விரைவில் முப்படைகளில் இணைக்கப்படும் எனத் தகவல்.

“பிராந்திய மொழிகளை அழிக்க பாஜக முயற்சி!''

நாட்டில் பிராந்திய மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை அழித்து, இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிறுவ பாஜக முயற்சிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பெருமையுடன் குறிப்பிடுவதால், தேசிய கீதத்தைக்கூட பாஜக அழித்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சு.

சாதி மறுப்பு திருமணம் செய்தவர் ஆணவ கொலை

ஆந்திரா: கோதாவரி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட துணை தாசில்தார் சந்தியாவின் கணவர் சூரிய பிரகாஷ் ராவ்வை அடித்து ஆணவ கொலை செய்த இருவர் கைது.
சந்தியாவின் திருமணத்தை எதிர்த்த சகோதரர்கள் சந்திரப்பா, கிரிபாபு இருவரும் வீடு புகுந்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் போது அப்பகுதியினர் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்

மோட்டரோலா சலுகை

மோடோரோலா ஸ்மார்ட் போன்களுக்கு இனி மாதாந்திர சரிபார்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு. உதிரி பாகங்கள் கட்டணத் தள்ளுபடியோடு, Labour Charges இல்லாமல் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை சரிபார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது

15 உயிர்களை பறித்த விபத்து

பொலிவியாவில் கரன்சி நோட்டுகளை எடுத்துச் சென்ற ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழப்பு. 30 பேர் படுகாயம். விமானம் புறப்பட்டபோது, பாதையில் இருந்து விலகிச் சென்று அருகேயுள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் இருந்து சிதறிய பணத்தை மக்கள் போட்டிப் போட்டு அள்ளிச் சென்றுள்ளனர்.

ஈரானுக்கு புதிய நெருக்கடி

ஈரானை 'தவறான தடுப்புக் காவலுக்கு ஆதரவு அளிக்கும் நாடாக (State Sponsor of Wrongful Detention)' அறிவித்து அமெரிக்க அரசு அதிரடி. அரசியல் ஆதாயத்திற்காகப் பல காலமாக அப்பாவி அமெரிக்கர்கள் மற்றும் பிற நாட்டு குடிமக்களை ஈரான் அரசு சிறைபிடித்து வருவதாகவும், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு

டி20 உலக கோப்பை: இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் குறைந்தது 64 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 40 பந்துகள் மீதமிருக்கும் சூழலில் வெற்றி பெற்றால் மட்டுமே, பாகிஸ்தான் அணியால் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற முடியும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget