Modi visit to Tamil Nadu: நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
Prime Minister Modi's visit to Tamil Nadu : தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் மோடி, கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பது மட்டுமில்லாமல், மதுரையில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் செல்லவுள்ளார்.

நெருங்கும் தேர்தல்- களம் இறங்கும் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் படி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு அதிமுக- பாஜக கூட்டணி செயல்பட்டு வருகிறது. திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் வகையில் பாமக, அமமுக, தமாக, ஐஜேகே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை இணைத்துள்ளது.
தமிழக்கை குறிவைக்கும் பாஜக
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கால் பதித்த பாஜக, தமிழகத்தில் மற்றும் தவித்து வருகிறது. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குறைந்தது இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்திற்குள் செல்ல திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பாஜக மூத்த தலைவர்கள் தமிழகத்தை குறிவைத்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழகத்தில் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் படி கடந்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில், இன்று மீண்டும் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார்.
தமிழகம் வரும் மோடி
இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள். இதனையடுத்து தனியார் விடுதியில் தங்கும் மோடியை பாஜக தலைவர்கள் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேசவுள்ளனர். நாளை காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லும் மோடி அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அடுத்தாக மதியம் 2.45 மணியளவில் தஞ்சாவூருங்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் செல்கிறார். இதனையடுத்து அங்கிருந்து மதுரைக்கு விமானம் மூலம் மதியம் 3030 மணிக்கு புறப்படும் மோடி. மதுரை விமான நிலைய வளாகத்தில் வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார்.
மோடியின் பயண திட்டம் என்ன.?
இதே போல பரமக்குடி - ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை திட்டங்கள், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கிறார். அடுத்தாக மாலை 4 மணியளவில் மதுரையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். இதனை தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒரே மேடையில் ஏறவுள்ளனர். இந்த கூட்டத்தை முடித்த பிறகு மதுரையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.























