மேலும் அறிய

இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?

பார்த்திபன் தன்னுடைய படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகியபோது அவர் முடியாது என்று மறுத்ததும், பார்த்திபன் அவர் காலில் விழுந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், இயக்குனர் பாக்யராஜ். இவரது ஆரம்ப கால படங்கள் பலவற்றிற்கும் இளையராஜா இசையமைத்தார். இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாக்யராஜ் அவரது சில படங்களுக்கு அவரே இசையமைத்தார். 

இளையராஜா காலில் விழுந்த பாக்யராஜ்:

இந்த நிலையில், இளையராஜாவுடன் பாக்யராஜுற்கு ஏற்பட்ட மோதலால் பாக்யராஜுன் உதவியாளர்களுக்கும் இசையமைக்க இளையராஜா மறுத்துள்ளார். இதுதொடர்பாக, பார்த்திபன் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

"பாக்யராஜ் இசையமைக்கிறேன் என்றார். நான் அனைத்து இயக்குனர்களுக்கும் முதல் படம் ராஜா சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் அதை கண்டிஷனாக சொல்கிறேன் என்று பாக்யராஜ் சாருக்கு தெரிந்தது. அதனால், என்னையும் பழனிச்சாமியையும் அனுப்பிவிட்டார். 

நீ போய் கேளு, ஓகே சொன்னார் என்றால் பண்ணலாம் என்றார். நானும், அவரும் மாறி, மாறி காலில் விழுந்து கும்பிடுவோம். அவர் முதலில் கெட் அவுட் என்பார். நீ போய் ஆர்மோனி பெட்டி வாங்கி வாசி என்பார். பாக்யராஜ் இசையமைப்பாளர் ஆகிவிட்டார். நீயும் ஆகு என்றார். உனக்கு ஏன் நான் பண்ணனும்? என்றார்.

இளையராஜா முடிவு:

பாக்யராஜின் உதவியாளர்கள் யாருக்கும் போடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். நானும், பழனிசாமியும் மாறி, மாறி காலைத் தொட்டு கும்பிடுவோம். இல்ல சார், நான் எல்லாம் கடைசி வரை இசை எல்லாம் பண்ணவே மாட்டேன் சார். அதை இப்போது வரை காப்பாத்துறேன். "

இவ்வாறு அவர் கூறினார்.

பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த பார்த்திபன் முதன்முதலில் இயக்கிய படம் புதிய பாதை. இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருப்பார். பின்னர், அவர் இயக்கிய 2வது படமான பொண்டாட்டி தேவை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். உள்ளே வெளியே படத்திற்கும் இசையமைத்தார்.

இளையராஜா ஏன் அப்படி நடந்து கொண்டார்?

பார்த்திபன் நடிகராக பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். பார்த்திபன் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அழகி படத்திற்கு இளையராஜாவே இசையமைத்துள்ளார்.

இளையராஜாவை அவரது இசையரங்கத்தில் நேரில் சென்று பாக்யராஜ் சந்திக்கச் சென்றபோது, அவரை வீட்டிற்குச் சென்று சந்திக்குமாறு பாக்யராஜுடம் இளையராஜா உதவியாளர் கூறியது இருவருக்கும் இடையே மனக்கசப்பு உருவாக காரணமாக அமைந்துள்ளது.

பின்னர், இது பெரியதாக விஸ்வரூபம் எடுக்க பாக்யராஜ் தான் இயக்கிய சில படங்களுக்குத் தானே இசையமைத்தார். இது இளையராஜாவிற்கு கோபத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, பாக்யராஜின் உதவியாளராக இருந்த பார்த்திபனிடம் இளையராஜா இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget