மேலும் அறிய

Trump On Iran: ”ஆயுதங்களை போடுங்க, இல்லைன்னா சாவுங்க” - ஈரானின் ஆபத்தை அழிப்போம் - ட்ரம்ப் வார்னிங்

Trump On Iran: ஆயுதங்களை கைவிட்டு சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள் என, ஈரானிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trump On Iran: கொடூரமான ஈரான் அச்சுறுத்தலை அழித்து ஒழிப்போம் என பேசி,  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை:

அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக ஈரானுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் சேர்ந்து தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆயுதங்களை கைவிட்டு சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள். கொடூரமான ஈரான் அச்சுறுத்தலை அழித்து ஒழிப்போம். அவர்களை ஏவுகணைகளையும், ஏவுகணை தொழிற்சாலைகளையும் தரைமட்டமாக்குவோம்” என ட்ரம்ப் பேசியுள்ளார்.

தாக்குதல் எதற்காக? - ட்ரம்ப் விளக்கம்

வீடியோவில் பேசிய ட்ரம்ப், “இஸ்ரேல் உடன் சேர்ந்து ஈரான் மீது மிக முக்கியமான தாக்குதலை அமெரிக்கா தொடங்கியுள்ளது. ஈரானில் இருந்து எழக்கூடிய ஆபத்துகளிலிருந்து அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்களது பிரதானமான இலக்கு ஆகும். அந்த மோசமான மற்றும் மிகவும் கடினமான மற்றும் பயங்கரமான நபர்களின் செயல்பாடுகளானது, அமெரிக்கவிற்கும் வெளிநாடுகளில் உள்ள நமது  ராணுவ தளங்களுக்கும்  மற்றும் உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளுக்கும் ஆபத்தானதாகும். 

ஈரான் மீது குற்றச்சாட்டு

47 ஆண்டுகளாக, ஈரானிய ஆட்சி அமெரிக்காவிற்கு மரணம் என்று கோஷமிட்டுள்ளது. பல நாடுகளில் அமெரிக்கா, நமது துருப்புக்கள் மற்றும் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது. அவர்களின் அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், ஐரோப்பாவில் உள்ள நமது நல்ல நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளை அச்சுறுத்தக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை தொடர்ந்து உருவாக்கவும் முயற்சித்தது. தற்போது ஈரான் முழுவதும் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. 

ஆயுதங்களை கைவிடுங்கள் , நீங்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவீர்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள். நாங்கள் தாகுதலை முடிக்கும்போது, உங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுவோம். அதன் பிறகு அங்கு அமையும் ஆட்சி உங்களுக்கானதாக இருக்கும். உங்களது அடுத்த தலைமுறைகளுக்கான ஒரே வாய்ப்பு இதுவாகும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Hormuz strait:
Hormuz strait: "வெறும் 33 கி.மீ தான்... ஆனால் உலகையே மிரட்டும் ஹார்முஸ்.. ஏன் அகலப்படுத்தவில்லை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget