மேலும் அறிய
Cine Stars Wishes ISRO : வரலாற்று சரித்திரம் படைத்த இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த திரை நட்சத்திரங்கள்!
சந்திரயான் 3 வரலாற்று சாதனையை படைத்ததையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்த சினிமா பிரபலங்கள்
1/6

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வெற்றிகரமான நிகழ்வுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
2/6

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறுகையில் “செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது முதல் நிலவில் இறங்கியது வரை - என்ன ஒரு பயணம்! இஸ்ரோ குழு நம் நாட்டின் பெருமை. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள் இது.இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
3/6

நடிகர் ரஜினிகாந்தின் பதிவில், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் சாதனையை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இந்தியா மாபெரும் சாதனையால் ஆச்சரியப்பட வைத்துள்ளது இது தேசத்திற்கு பெருமைக்குரிய தருணம். எங்களை பெருமையடைய செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
4/6

அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் “இந்த ஈடு இணையில்லாத சாதனை என்றும் நினைவில் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
5/6

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதிவில், “சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
6/6

மேலும் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி, நடிகர்களில் சூர்யா, சிரஞ்சீவி, அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார், ஜூனியர் என்.டி.ஆர், ஹ்ரித்திக் ரோஷன், ஜீவா,மாதவன், யஷ், நடிகைகளில் கஜோல், அனன்யா பாண்டே, காஜல் அகர்வால் பிரியங்கா சோப்ரா, சினேகா,சம்யுக்தா, மெளினி ராய், சன்னி லியோன் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Published at : 24 Aug 2023 01:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















