மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தது மட்டுமின்றி அவருக்கு எதிராக பாமக ஒழங்கு நடவடிக்கை குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

பாமக-வில் ராமதாஸ் - அன்புமணி சண்டை உச்சத்தில் உள்ள நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பட்டானூரில் ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுத்துள்ளார்.
அன்புமணிக்கு எதிராக தீர்மானம்:
இந்த பொதுக்குழுவில் நிறுவனராக உள்ள ராமதாஸ் இனிமேல் தலைவராக நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அன்புமணி ராமதாஸிடம் இருந்த அதிகாரத்தை முதலில் பறித்தனர். இதையடுத்து, கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணிக்கு எதிராக தீர்மானத்தை வாசித்தனர்.
ஒழுங்கு குழு நடவடிக்கை:
அந்த தீர்மானத்தில், கடந்த 22.12.2024ல் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மைக்கை தூக்கிப்போட்டு மருத்துவருக்கு எதிராக பேசியது, பனையூரில் புதிய கட்சி அலுவலகம் தொடங்கியுள்ளேன். கைப்பேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள் என்று பேசியது கட்சியை பிளவுபடுத்துவதும், குழப்பத்தை ஏற்படுத்துவதும் தலைமைக்கு கட்டுப்படதாக ஒழுங்கு நடவடிக்கையாகவே கட்சி கருதுகிறது.
11.05.2025 மாமல்லபுரம் இளைஞர் மாநாடு முடிந்த பிறகு 13.05.2025 தைலாவரம் மா.செ. கூட்டம் நடக்கும் என்று ராமதாஸ் அறிவித்தார். அன்புமணி இரவு முழுவதும் மா.செ.க்களுக்கு தொடர்பு கொண்டு தைலாவரம் தோட்டத்திற்கு யாரும் போகதீர்கள் என்றும், கட்சியில் இருந்து தன்னை நீக்கப்போவதாக பொய்யான செய்திகளைச் சொல்லி 108 மாவட்டச் செயலாளர்களில் 100 பேரை தடுத்து நிறுத்தியதாக பிளவுபடுத்த திட்டமிட்ட செய்ததை தவறான நடவடிக்கை.
அவமானப்படுத்தும் செயல்:
பாமக சமூக ஊடக பிரிவு பேரவை ஒரு சிலரை கையில் வைத்துக்கொண்டு மருத்துவர் ஐயா பற்றியும், ஐயா உடன் இருப்பவர்களை பற்றியும் மிகவும் அவதூறான இழிவுபடுத்தும் செய்திகளை ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் மூத்தவர்களான ஆளுமை மிக்கவர்கள் ராமதாஸ் - அன்புமணியிடம் சமரசம் நடத்திய நிலையில், ராமதாஸ் அதை ஏற்று மதித்த நிலையில் அன்புமணி பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது.
ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது:
தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
ராமதாஸ் அனுமதி இல்லாமல் ஆலோசிக்காமல் பொதுக்குழு என்ற பெயரில் தனி நாற்காலி போட்டு, துண்டு அணிவித்து, படம் வைத்து புத்தி சுவாதினம் இல்லாத சிலரை வைத்து கடவுளிடம் ஐயாவிற்கு நல்ல புத்தி கொடு என்று ராமதாசை அவமானப்படுத்தும் நடவடிக்கையை ஏற்க முடியாத அநாகரீகமான செயல்.
கபட நாடகம்:
கட்சி நிறுவனர், தலைவர் ராமதாஸிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக நடைபயணம் மேற்கொண்டு வருவது கபட நாடகம் ஆகும். தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசிடம் ஆசி பெற ஆர்வத்துடன் வருபவர்களை அங்கே செல்ல வேண்டாம் என பணம், பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை காட்டி பனையூருக்கு கடத்திச் செல்வது
ராமதாஸ் என் பெயரையும், படத்தையும் பயன்படுத்தக்கூடாது வெளிப்படையாக கூறிய நிலையில் கட்சியினரிடம் என் குலசாமி என்று கூறிக்கொண்டு பிறரை தூண்டிவிட்டு அவமானப்படுத்தியும் பேசி வருவது.
அன்புமணி நியமனம் செல்லாது:
நிலம், நீர், காற்று, மாசுபடாமல் பாதுகாத்து சுற்றுச்சுழல் பாதுகாக்கும் நோக்கில் பசுமை தாயகம் அமைப்பை ராமதாஸ் தொடங்கினார். பசுமை தாயகம் சுற்றுச்சுழல் அமைப்பை கைப்பற்றிக் கொண்டது.
பாமக தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வந்தது. ராமதாசிற்கு தெரியாமலே திட்டமிட்டு தி.நகரில் உள்ள முகவரிக்கு மாற்றப்பட்டது.
ராமதாஸால் 30.05.2025க்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லும். அது நீட்டிக்கும். அன்புமணியால் நியமிக்கப்பட்ட எந்த பொறுப்புகளும் எந்த வகையிலும் செல்லாது.
அன்புமணி பொய்:
ராமதாஸிடம் ஏதும் பேசாமல் 40 தடவை பேசியதாக பொய் பேசியது.
சட்டமன்ற குழு தலைவர் ஜிகே மணி, சேலம் எம்.எல்.ஏ. அருள் இருவரும் குணம் அடைய கூட்டுப்பிரார்த்தனை செய்வதாக கேலி, கிண்டல் செய்தது
இவ்வாறு 16 வகையான ஒழுங்கு குழு நடவடிக்கையை ஆய்வு செய்து ராமதாசிடம் பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















