மேலும் அறிய
பிக்னிக் ஸ்பாட்டாக மாறிய த.வெ.க., மாநாட்டு திடல்.. ஞாயிற்றுக் கிழமையில் குடும்பம், குடும்பமாக குவிந்த மக்கள்!
தவெக பொதுச் செயலாளர் ஆனந்தை கண்டதும் திடலில் குவிந்திருந்த மக்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.

தவெக மாநாடு
Source : whats app
தமிழக வெற்றி கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெண்கள் குழந்தைகள் என குடும்பத்துடன் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
மதுரை தவெக மாநாடு
மதுரையில் 21-ஆம் தேதி மாநாடு தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2- ஆவது மாநில மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி வருவதால் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாகாவும், மாநாடு தேதியை முன்னதாக மாற்றி அமைக்க காவல்துறை அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதனால் மாநாடு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். மாநாட்டிற்காக கடந்த மாதம் 16ஆம் தேதி காலை 7 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை, பந்தக்கால் நடப்பட்டது. தவெக இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பார்க்கிங் வசதி இடம் தயார்
500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் மாநாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் பிரம்மாண்ட விழா மேடை, விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் நடந்து சென்று சந்திப்பதற்கான ராம்ப் வாக் நடைமேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள், பணி நிறைவு பெற்றுள்ளது. ஒலி, ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள். மின்விளக்குகள் சில இடங்களில் பொருத்தப்பட்டு அதற்கான மின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநாட்டின் பிரம்மாண்ட முகப்பு ஆர்ச் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல மூன்று இடங்களில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
செல்ஃபி புகைப்படங்களை
மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் முன்னேற்பாடுகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பார்வையிட்டு வருகிறார். மாநாடு பணிகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து ஏராளமான பொதுமக்களும் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் அவ்வளியே செல்லும் வாகன ஓட்டிகளும் மாநாட்டு திடலுக்கு வந்து செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செல்பி எடுத்த மக்கள் - மகிழ்ச்சியில் தவெக தொண்டர்கள்
இந்நிலையில் பாரப்பத்தி மாநாட்டு திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெண்கள் குழந்தைகள் என குடும்பத்துடன் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வருகின்றனர். மேலும் இன்று மாநாடு திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட வந்த அக்கட்சியும் பொதுச் செயலாளர் ஆனந்தை கண்டதும் திடலில் குவிந்திருந்த மக்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ





















