மேலும் அறிய
Suriya Movie Lineup : அடுத்தடுத்த படங்களில் பிஸியான சூர்யா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் குறித்தான சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.

நடிகர் சூர்யா
1/7

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் பிரபல நடிகர் சிவக்குமாரின் மகன் ஆவார்.
2/7

இவர் மணிரத்னம் தயாரிப்பில் உருவான நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/7

அதை தொடர்ந்து நந்தா படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
4/7

நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், “நான் நினைத்து பார்த்ததை விட கங்குவா படம் 100 மடங்கு அற்புதமாக வந்துள்ளது.”
5/7

இரண்டாவதாக, வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு, இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விரைவில் தொடரும் என தெரிவித்தார்
6/7

மூன்றாவதாக, சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது பெற்ற சுதா கொங்கரா -சூர்யா கூட்டணி சூர்யா 43இல் மறுபடியும் இணைய உள்ளதாக கூறினார்.
7/7

பின்னர், “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் உள்ள ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையை என்னிடம் கூறினார். அது மிகவும் நன்றாக இருந்தது. லோக்கேஷின் கனவு படமான இரும்பு கை மாயாவி படத்திற்கு பிறகு இது படமாக்கப்படும்.” என்றார் சூர்யா.
Published at : 14 Aug 2023 11:12 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement