Mukesh Ambani: முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஜியோ IPO குறித்து முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு
Mukesh Ambani on JIO IPO: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 48-வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் இந்திய பங்குச் சந்தையில் நுழைய இருப்பதாக தெரிவித்தார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
“2026-ல் ஜியோ பங்குகள் பங்குச் சந்தையில் அறிமுகம்“
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, முக்கிய அறிவிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் இந்திய பங்குச் சந்தையில் நுழைய இருப்பதாக தெரிவித்தார்.
2026-ம் ஆண்டின் முதல் பாதியில், ஜியோ பங்குகள், ஐபிஓ-ஆக வௌயிடப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதற்காக சில முன் அனுமதிகளை பெற வேண்டியுள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த ஐபிஓ உலக அளவில் பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் பங்குகளை மக்கள் வாங்கும் வகையில் பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது.
“முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்“
தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, ஜியோ நமது உலகளாவிய போட்டியாளர்களைப் போல், நன் மதிப்பை உருவாக்கும் திறன் கொண்டது என்பதை இது நிரூபிப்பதாகவும், இது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று உறுதியாக நம்புவதாகவும் கூறினார். மேலும், ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளதாகவும் அறிவித்தார்.
இது குறித்து கூறிய அவர், “இன்று, ஜியோ குடும்பம் 50 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்“. 50 கோடி வாடிக்கையாளர்கள் என்பது உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவின் அடையாளம் என்று தெரிவித்தார். இதற்காக, ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
ஜியோவின் வருவாய் 1,28,218 கோடி ரூபாயாக, அதாவது 15 பில்லியன் டாலர்களாக இருந்தது, இது 2025 நிதியாண்டில் 17 சதவீத வளர்ச்சியாகும், மற்றும் EBITDA 64,170 கோடி ரூபாய், அதாவது 7.5 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த புள்ளி விவரங்கள், ஜியோ ஏற்கனவே உருவாக்கியுள்ள மகத்தான அதிப்புக்கு ஒரு சான்றாகும்.
ஜியோ இந்தியாவில் ஏஐ புரட்சியை அறிவிக்கும். ஜியோ தனது செயல்பாடுகளை இந்தியாவிற்கு வெளியே விரிவுபடுத்தும், எங்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எடுததுச் செல்லும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதம் வளர்ச்சி அடையும்“
இந்நிகழ்வில் பேசியபோது, இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் நம்பிக்கை தெரிவித்த முகேஷ் அம்பானி, இந்தியாவன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவீத வேகத்தில் வளர முடியும் என்று கூறினார்.
2 தசாப்தங்களில், தனிநபர் வருமானத்தையும் 4 முதல் 5 மடங்கு அதிகரிக்க முடியும் என்றும், இன்று நமது பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 6.8 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
மேலும், வரும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 லட்சத்திற்கம் அதிகமாக அதிகரிக்கும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.





















