மேலும் அறிய
Kollywood Movies : 10 ஆண்டுகளை நிறைவு செய்த வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை!
Kollywood Movies: தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படமும் நடராஜன் நடித்த சதுரங்க வேட்டை படமும் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

தமிழ் படங்கள்
1/6

வேல்ராஜ் - தனுஷ்- அனிருத் கூட்டணியில் வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி. இது தனுஷின் 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
2/6

பொறியியல் படித்த தனுஷ் தான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்குதான் செல்வேன் என்று குறிக்கோளோடு இருக்கிறார். ஒரு வழியாக இன்ஜினியர் வேலை கிடைக்கிறது. அதன் பிறகு ஒரு பெரிய பில்டிங் கட்டுவதற்கு ப்ராஜெக்ட் கிடைக்கிறது. அந்த பில்டிங்கை கட்டவிடாமல் வில்லன் இல்லாத வேலைகளை பார்க்கிறார். வில்லனை சமாளித்து பில்டிங்கை எப்படி கட்டினார் என்பதே மீத கதை.
3/6

இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் தனுஷ் எழுதி இருந்தார். மேலும் அம்மா அம்மா என்ற பாடலை ஜானகி உடன் இணைந்து பாடி இருந்தார். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
4/6

நடராஜன் மற்றும் வினோத் கூட்டணியில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சதுரங்க வேட்டை.
5/6

ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, எம் எல் எம் போன்ற ஊழல் செய்து மக்களை ஏமாற்றி வருகிறார் நடராஜன். பிறகு ஒரு கும்பலிடம் மாட்டிகொள்கிறார். அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்கு ரைஸ் புல்லிங் என்ற பெரிய திருட்டு வேலை செய்கிறார். அந்த திருட்டை சரியாக செய்தாரா? அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தாரா? என்பதே படத்தின் கதை
6/6

மக்களை நூதனமாக ஏமாற்றுவதை திரைக்கதையின் மூலம் மிக சிறப்பாக காட்டிருப்பார் இயக்குநர். இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 18 Jul 2024 11:45 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement