மேலும் அறிய

''மத்திய அரசின் நாசகரமான ஏபிசி திட்டம்'' சென்னை பல்கலைக்கழகம் அமல்படுத்துவதா?- எழும் கண்டனங்கள்!

’’அரசுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் சூழலில் தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கி மாணவர்களை தள்ளுவதே ஏபிசி திட்டத்தின் விளைவாக இருக்கும்’’

சென்னை பல்கலைக்கழகம் மத்திய அரசின் ஏபிசி திட்டத்தை அமல்படுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு அலுவலகச் செயலாளர் வெ. சுதாகர் கூறி உள்ளதாவது:

தனியார்மயம், வியாபார மயம் ஆக்கவே..

''ஒன்றிய பாஜக அரசாங்கம் அமல்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக அகாடெமிக் கிரெடிட் வங்கித் திட்டம் (Academic Bank of Credit – ABC scheme) உள்ளது. உயர் கல்வியை இணைவழிக் கல்வியாக்குவதன் மூலம் அதனை தனியார்மயம், வியாபார மயம் ஆக்குவதற்காகவே இந்த ஏபிசி திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியது.

ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நாட்டின் எந்தப் பல்கலைக்கழகத்திலும் 70% பாடங்கள் வரை இணைய வழியில் பயிலலாம் என்ற ஏபிசி திட்டம் பல்கலைக்கழக அமைப்பிலும் உயர் கல்வியிலும் பெரும் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் அபாயங்களை கொண்டுள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கி மாணவர்களை தள்ளவா?

அரசுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் சூழலில் தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கி மாணவர்களை தள்ளுவதே ஏபிசி திட்டத்தின் விளைவாக இருக்கும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்து இத்திட்டத்தை எதிர்த்து வரும் வேளையில், அதனை சென்னை பல்கலைக்கழகம் அமல்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாடு மாநில அரசாங்கம் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் வேளையில் அதையும் பொருட்படுத்தாது சென்னை பல்கலைக்கழகம் மிகவும் நாசகரமான இந்த ஏபிசி திட்டத்தை அமல்படுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நாசகார ஏபிசி திட்டம்

ஏபிசி திட்டத்தின் படுபாதக பின்விளைவுகளை சரியாக ஆராயாமலும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்தைக் கேளாமலும் அவசர கதியில் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை  அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு மாநிலக் கமிட்டி (ஏ.ஐ.எஸ்.இ.சி)  வன்மையாகக் கண்டிக்கிறது. சென்னை பல்கலைக்கழகம் இந்த நாசகார ஏபிசி திட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற ஏ.ஐ.எஸ்.இ.சி கோருகிறது.

இத்திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் திரும்பப் பெறும் வகையில் குரலெழுப்புமாறு ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏ.ஐ.எஸ்.இ.சி  அறைகூவி அழைக்கிறது’’.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!
JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Top 10 News Headlines: மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
Fortuner Rival: பெஸ்ட் மைலேஜில் ஃபார்ட்சுனரின் போட்டியாளர் - பட்ஜெட்டில் அடங்குமா? SUV-யின் லாஞ்ச் தேதி லாக்..!
பெஸ்ட் மைலேஜில் ஃபார்ட்சுனரின் போட்டியாளர் - பட்ஜெட்டில் அடங்குமா? SUV-யின் லாஞ்ச் தேதி லாக்..!
Tamilnadu Round Up: டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக்கில் மாற்றம், டெல்லி செல்லும் CM விஜய், மின்வெட்டு பிரச்னை - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget