மேலும் அறிய
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
இந்த ஆண்டில் மட்டும் , 119 மீனவர்களும் 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதலமைச்சர் ஸ்டாலின்
Source : X
இலங்கை-தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் , 119 தமிழ்நாடு மீனவர்களும் 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படிருக்கிறது என்றும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















