ஏலியனால் கருவுற்ற பெண்கள்: அபத்தம் பேசும் பெண்டகன் ஆவணம்
பல சாட்சிகள் யுஎஃப்ஒக்கள் மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாகவும் ஒரு பெண்ணை கருவுற விட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏலியன்கள் பூமிக்கு வருவது என்பதே விந்தை என்றால் அமெரிக்காவில் சிலர் ஒருபடி மேலே போய் அது மனித பெண் ஒருவரை கருவூறச் செய்துவிட்டதாகக் கூறி வருகின்றனர். பல சாட்சிகள் யுஎஃப்ஒக்கள் மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாகவும் ஒரு பெண்ணை கருவுற விட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு புலனாய்வு ஏஜென்சியின் பென்டகன் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளன என்பதுதான் இதில் உள்ள கூடுதல் சுவாரஸ்யத் தகவல். இந்த அறிக்கை தகவல் பெறும் உரிமையின் ஒரு பகுதியாக பெறப்பட்டது.
'மனித மற்றும் உயிரியல் திசுக்களில் முரண்பாடான கடுமையான ஃபீல்ட் எஃபெக்ட்ஸ்' என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, அமானுஷ்ய அனுபவங்கள் அல்லது "விநோதமான மேம்பட்ட விண்வெளி நடவடிக்கைகளால் மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்" என்கிற தலைப்பில் ஏலியன்களால் மனிதர்களில் ஏற்பட்ட உடல்நல பாதிப்பை ஆராய்கிறது.
View this post on Instagram
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிவிலியன் ஆராய்ச்சி நிறுவனம் MUFON ஒரு பட்டியலைத் தொகுத்தது. இது அறிக்கையின் "பயனுள்ள தரவுகள்” பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் மனிதர்கள் மீதான UFOக்களின் உயிரியல் விளைவுகள் குறித்து இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. "வெளிப்படையான கடத்தல்", "குற்றம் நிரூபிக்க முடியாத சூழலிலான கருவுறுதல்", ”பாலியல் உறவுகள்”, ”டெலிபதி அனுபவம்” மற்றும் டெலிபோர்ட்டேஷன் போன்ற விநோதமான நிகழ்வுகள் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணத்தில் யுஎஃப்ஒக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஐந்து பாலியல் ரீதியான தொடர்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இதுதவிர UFOக்களை எதிர்கொள்பவர்களை அவை காயப்படுத்தலாம் அல்லது கதிர்வீச்சு தீக்காயங்கள் ஏற்படலாம் அல்லது மூளை பிரச்சினைகள் ஏற்படலாம், தவிர நரம்புகள் சேதமடைந்து பாதிக்கப்படலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.