Guinness World Record: 60 நிமிடத்தில் 120 கோழிக்கால்கள் சாப்பிட்ட பெண்... கின்னஸ் புக்கில் கெத்தாக இடம்பிடித்து அசத்தல்!
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் சிமானிலே என்ற பெண் ஒரு நிமிடத்தில் 120 கோழிக்கால்களை சாப்பிடு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் சிமானிலே என்ற பெண் ஒரு நிமிடத்தில் 120 கோழிக்கால்களை சாப்பிடு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள உம்லாசி நகரில் ஷாம்ப்ளேன்ஸ் வுஞ்ச் என்ற உணவகம் மற்றும் மதுபான விடுதி தனது நான்கு ஊழியர்களை கோழிக்கால் சாப்பிடும் போட்டியில் களமிறக்கியது. அதிகாரபூர்வ போட்டி தொடங்குவதற்கு முன்பாக, நடுவர் சோபியா கிரீனேக்ரே பங்கேற்பாளர்களின் ஒவ்வொரு தட்டுகளிலும் 300 கிராம் (10.5 அவுன்ஸ்) கோழி கால்களை வைத்தார்.
விதிகளின்படி, ஒரு நேரத்தில் ஒரு கோழி கால் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்படும். பல கால்களை எடுத்து சாப்பிடுவது தகுதியிழப்பு செய்யப்படுவர். இதையடுத்து 60 நிமிடங்கள் நடக்கும் இந்த போட்டிக்கான ஏர்ஹார்ன் ஒலிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவரும் கோழிக்கால்களை வேகவேகமாக உட்கொள்ள தொடங்கினர்.
வுயோல்வெது சிமானிலே 60 நிமிடங்களில் 120 கால்களை உட்கொண்டு புதிய உலக சாதனை படைத்தார். இது அவரது போட்டியாளர்களை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். இதையடுத்து, வுயோல்வெது சிமானிலேவுக்கு கின்னஸ் உலக சாதனை வழங்கப்பட்டது.
Watch the 1st episode of Stumbo Record Breakers tomorrow, Sunday 25 September at 5.30pm on @etv #southafricancuisine #heritageweekend #stumborecordbreakers #chickenfeet pic.twitter.com/k7zh7V4zfx
— Broadway Sweets SA (@BroadwaySweets) September 24, 2022
இதுகுறித்து அவர் மகிழ்ச்சியாக பேசுகையில், “ நான் தான் வெற்றியாளர் என்று சொல்லும்போது என் காதுகள் கேட்களால் நம்பமுடியவில்லை. உலகெங்கிலும் உள்ள வேகமாக உண்பவர்கள் மிகவும் போட்டித்தன்மை கொண்டவர்கள். இருப்பினும் இந்த போட்டியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் இதை முறியடிக்க வேறு சிலருக்கு கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்.