சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..வெளுக்கும் கனமழை..நாளைய வானிலை எப்படி?
Chenai Weather: சென்னையில் இன்று இரவு 7 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதற்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதையடுத்து பிற்பகல் பொழுதில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென கார்மேகங்கள் சூழ்ந்தன. காற்றும் அதிக வேகத்துடன் வீசியதால், சாலையில் உள்ள தூசுகளும் பறந்ததன் காரணமாக, வாகன ஓட்டிகளும் சிறிது நேரம் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து, மாலை 4 மணிக்கு மேல் காற்றுடன் மழையும் சேர்ந்து கொண்டது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை வானிலை மையம் விடுத்துள்ளது.
The dust and wind before the actual start of rains in Chennai. The storms are moving from NW of city ie via Ambattur Avadi Rehills belt. Beware of the high winds. Don't park your vehicle under tree. There will be high thunder and lightening too.
— Tamil Nadu Weatherman (@praddy06) May 4, 2025
This is the video of dust from… pic.twitter.com/y59CxAMlXO
15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:
இந்நிலையில், இன்று இரவு 7 மணிவரை சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதற்கான ஆரஞ்சு அலர்ட்டை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை | கத்திரி வெயிலின் முதல் நாளே கொட்டி தீர்த்த மழை#Chennai #Rain #ChennaiRains #Thunderstroms #DDTamilNews pic.twitter.com/RLA92s7E73
— DD Tamil News (@DDTamilNews) May 4, 2025
தமிழ்நாட்டின் வானிலை:
தமிழ்நாட்டின் வானிலை தொடர்பாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்பகுதி நிலவுகிறது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில்ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுகிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர். விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
05-05-2025:
தமிழகத்தில்ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்பத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-05-2025:
தமிழகத்தில்ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் | இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
07-05-2025:
தமிழகத்தில்ஒரு சில இடங்களிலும் பதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08-05-2025:
தமிழகத்தில்ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09-05-2025: 10-05-2025 தமிழகத்தில்ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.






















