Operation Dost Video: களப்பணியில் கலக்கிய ராணுவ வீரர்கள்.. மூவர்ணக்கொடி ஏற்றி பெருமிதம்.. இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ!
கடந்த வியாழக்கிழமை இந்திய ராணுவம் ட்விட்டரில் பகிர்ந்த ஒரு படத்தில் ஒரு பெண், கள மருத்துவமனையில் பணியில் இருக்கும் ராணுவ வீரர் ஒருவரை கட்டிப்பிடித்து தனது நன்றியை தெரிவித்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கள்கிழமை காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிடங்கள் இடிந்து அனைத்து இடங்களிலும் ஏற்பட்ட பேரழிவு காட்சிகள் இணையத்தில் வெளியாகி மனதை உருக்கி, பதறவைத்தபடி இருக்கின்றன. மேலும், இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, ’ஆபரேஷன் தோஸ்த்’ என்ற அடிப்படையில் இந்திய ராணுவத்தினரை சேர்ந்த வீரர்களை துருக்கிக்கு அனுப்பி வைத்த மத்திய அரசு, கம் ஏற்பட்டதில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. இந்த மோசமான நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என உறுதியளித்தது.
அதன்படி, ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலில மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பிவைக்கப்பட்டது. இதனிடையே அங்கு உதவி வரும் இந்திய வீரர்களுக்கு எங்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
#WATCH | #OperationDost continues in Turkey, days after powerful earthquakes hit the country and Syria, claiming at least 24,000 lives
— ANI (@ANI) February 11, 2023
Visuals from a school building in Hatay where 60 Para Field Hospital of the Indian Army is providing medical aid & relief measures to the people pic.twitter.com/g8m46B5Efk
துருக்கிக்கு மீட்க சென்ற இந்திய ராணுவ அங்குள்ள ஹெட்டே மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கள மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ளது. இந்த கள மருத்துவமனையில் நேற்று இந்திய ராணுவ வீர்ரகள் மூவர்ண கொடியை ஏற்றினர். தற்போது, அங்கு தேசிய கொடியை ஒட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய ராணுவம் நிறுவியுள்ள இந்த கள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே ஆய்வகம் மற்றும் மருத்துவ கடைகள் உள்ளன. சிகிச்சை குறித்து பேசிய இரண்டாம் நிலை அதிகாரியான லெப்டினண்ட் கர்னல் ஆதர்ஷ் கூறுக்கையில், புதையுண்டவர்கள் மற்றும் நோயாளிகளை மீட்டு நேற்று 350 பேருக்கு சிகிச்சை அளித்தோம். ஒன்று காலை முதல் 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வரும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ தொடங்கப்பட்ட இந்த ‘ஆபரேஷன் தோஸ்த்’ மக்களின் இதயங்களை வென்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்திய ராணுவம் ட்விட்டடில் பகிர்ந்த ஒரு படத்தில் ஒரு பெண் கள மருத்துவமனையில் பணியில் இருக்கும் ராணுவ வீரர் ஒருவரை கட்டிப்பிடித்து தனது நன்றியை தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.